உயிர்களைப் பற்றி...
கணேஷ் அரவிந்த்

உயிர்களைப் பற்றிச் சைவ சமயம் குறிப்பிடுவது:
தோற்றம்
1. கருப்பை தோற்றம் - மக்கள், தேவர், விலங்கு
2. முட்டைத் தோற்றம் - தவளை, ஆமை, பாம்பு, உடும்பு, மீன், முதலை, பறவை போன்றவை
3. வியர்வைத் தோற்றம் - கிருமி, சில வகைப் புழுக்கள், விட்டில், பேன் முதலியன
4. விதைத் தோற்றம் - மரம், செடி, கொடி, பூண்டு (கிளை, கிழங்கு, தண்டு, வேர் மூலமும் பரவுகின்றன)
எழுவகைப் பிறப்புகள்
மேற்காணும் நான்கு வகைத் தோற்றத்தில் உருவாகும் உயிரினங்கள் எழுவகைப் பிறப்பு வகைகளில் அடங்கும். அவையாவன;
1. ஊர்வன - 11 இலட்சம்
2. தேவர் - 14 இலட்சம்
3. நீர்வாழ்வன - 10 இலட்சம்
4. பறவை - 10 இலட்சம்
5. விலங்குகள் - 10 இலட்சம்
6. மக்கள் - 9 இலட்சம்
7. தாவரம் - 20 இலட்சம்
“ஊர்வ பதினொன்று ஒன்பது மானுடம்
நீர், பறவை, நாற்கால் ஓர் பப்பத்து - சீரிய
பந்தமாம் தேவர் பதினான்கு அயன் படைத்த
அந்தமில் சீர்த் தாவரம் நாலைந்து”
என்று எண்பத்து நான்கு இலட்சம் வேறுபாடுடைய உயிர்வகைகள் வாழ்கின்றன.
அறிவு
1. ஓரறிவுயிர் - புல், மரம் - உற்றுணர்வு
2. ஈரறிவுயிர் - நத்தை, சிப்பி - உற்றுணர்வு மற்றும் சுவை
3. மூவறிவுயிர் - செல், எறும்பு - உற்றுணர்வு, சுவை மற்றும் மூக்குணர்வு
4. நான்கறிவுயிர் - நண்டு, தும்பி - உற்றுணர்வு, சுவை, மூக்குணர்வு மற்றும் கண்பார்வை
5. ஐந்தறிவுயிர் - விலங்குகள் - உற்றுணர்வு, சுவை, மூக்குணர்வு, கண்பார்வை மற்றும் காது கேட்டல்
6. ஆறறிவுயிர் - மனிதர்கள் - உற்றுணர்வு, சுவை, மூக்குணர்வு, கண்பார்வை, காது கேட்டல் மற்றும் மன உணர்வு.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.