கோவை- பொள்ளாச்சி நெடுஞ்சாலையில், கோவையிலிருந்து பத்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஈச்சனாரி விநாயகர் கோயிலில் விநாயகருக்கு ஒவ்வொரு நட்சத்திர நாளிலும் ஒரு சிறப்பு அலங்காரம் செய்யப்படுகிறது.
1. அஸ்வினி - தங்கக் கிரீடம், அறுகம்புல் அலங்காரம்.
2. பரணி - அறுகம்புல் மாலை.
3. கார்த்திகை - வெள்ளிக்கவச அலங்காரம்.
4. ரோகிணி - சந்தன அலங்காரம்.
5. மிருகசீரிடம் - கஸ்தூரி மஞ்சள் அலங்காரம்.
6. திருவாதிரை - நிறைமணி (காய்கறி) அலங்காரம்.
7. புனர்பூசம் - தாமரைப் பூமாலை.
8. பூசம் - தங்கக் கிரீடம், மாலை அலங்காரம்.
9. ஆயில்யம் - பச்சிலை அலங்காரம்.
10. மகம் - திருநீறு அலங்காரம்.
11. பூரம் - அன்னம், கஸ்தூரி மஞ்சள் அலங்காரம்.
12. உத்திரம் - பழ அலங்காரம்.
13. ஹஸ்தம் - வஸ்திர அலங்காரம்.
14. சித்திரை - தங்கக் கிரீடம், வெள்ளிக்கவச அலங்காரம்.
15. சுவாதி - தங்கக் கவசம், அன்ன அலங்காரம்.
16. விசாகம் - தங்கக் கிரீடம், ரோஜா மாலை.
17. அனுஷம் - தங்கக் கிரீடம், வெள்ளிக்கவசம், அறுகம்புல் அலங்காரம்.
18. கேட்டை - வெள்ளிக் கவசம், குங்கும அலங்காரம்.
19. மூலம் - வெற்றிலை அலங்காரம்.
20. பூராடம் - சம்பங்கி மாலை அலங்காரம்.
21. உத்திராடம் - சுவர்ண அலங்காரம்.
22. திருவோணம் - மலர் அலங்காரம்.
23. அவிட்டம் - குங்கும அலங்காரம்.
24. சதயம் - அன்ன அலங்காரம்.
25. பூரட்டாதி - தங்கக் கவசம், ரோஜா மாலை அலங்காரம்.
26. உத்திரட்டாதி - தங்கக் கவச அலங்காரம்.
27. ரேவதி - வெண்ணெய் அலங்காரம்.
அவரவர் பிறந்த நட்சத்திரங்களுக்குரிய நாளில் இந்த விநாயகரை வழிபட்டால் பல நன்மைகள் வந்து சேரும்.