வியாசர் கந்தபுராணத்தை எழுதத் தொடங்கும் முன் பதினாறு பெயர்களால் கணபதியை வணங்கியிருக்கிறார்.
1. ஸுமுகன்- மங்கள முகமுடையவர்.
2. ஏக தந்தன்- ஒற்றைத் தந்தம் கொண்டவர்.
3. கபிலன்- மேக- சாம்பல் வண்ணர்.
4. கஜகர்ணகன்- யானைக் காதுகள் கொண்டவர்.
5. லம்போதரன்- பருத்த வயிறு கொண்டவர்.
6. விகடன்- குள்ளமாக இருப்பவர்.
7. விக்னராஜன்- இடையூறுகளுக்கு அதிபர்.
8. விநாயகன்- எல்லாருக்கும் நாயகர்; முதன்மையானவர்.
9. தூமகேது- அக்னியைப்போல பிரகாசிப்பவர்.
10. கணாத்யக்ஷன்- பூதங்களுக்குத் தலைவர்.
11. பாலசந்திரன்- சந்திரனை தரித்தவர்.
12. கஜானணன்- யானைமுகம் கொண்டவர்.
13. வக்ரதுண்டன்- வளைந்த துதிக்கை கொண்டவர்.
14. கும்பகர்ணன்- முறம்போன்ற காதுகள் கொண்டவர்.
15. ஹேரம்பன்- பக்தர்களுக்கு அருள்புரிபவர்.
16. ஸ்கந்தபூர்வஜன்- கந்தனுக்கு முன்னவர்.
இந்தப் பதினாறு பெயர்களைக் கொண்டு வணங்கினால் அனைத்துத் தடைகளும் விலகி அனைத்துச் செயல்களும் வெற்றியடையும்.