வணக்கங்கள்
இந்து சமயம் வணங்குவதை ஐந்தாக வகைப்படுத்தியிருக்கிறது. அவை;
ஏகாங்கம் - தலை வணங்குதல்
திரியாங்கம் - இரு கை குவித்து வணங்குதல்
பஞ்சாங்கம் - தலை, இரு கால் நிலத்தில் தோய வணங்குதல்
ஷடாங்கம் - தலை, இரு கை, மார்பு, முழந்தாள் இரண்டும் பட நிலத்தில் வணங்குதல்
அஷ்டாங்கம் - தலை, மார்பு, இரு செவி, இருகை, பாதங்கள் நிலத்தில் பட வணங்குதல்.
பக்திகள்
இந்து சமயம் பக்தியை ஒன்பது வகையாகப் பிரிக்கிறது. அவை;
1. திருநாமம் புகழக்கேட்டல் - சிரவணம்
2. இறைவன் புகழ் பாடல் - கீர்த்தனம்
3. இறைவனைத் தியானிதல் - ஸ்மரணம்
4. திருவடித் தொண்டு - பாத சேவனம்
5. இறைவனை அர்ச்சித்தல் - அர்ச்சனம்
6. இறைவனை வணங்குதல் - வந்தனம்
7. இறைவனுக்கு ஆளாதல் - தாஸ்யம்
8. இறைவனோடு ஒன்றுபடுதல் - ஸஹ்யம்
9. ஆத்ம நிவேதன, - ஆத்ம அர்ப்பனம்