* சித்திரை மாதம், சித்திரை நட்சத்திர நாளில் சிவபெருமானை வழிபட்டால் குழந்தைப்பேறு கிடைக்கும்.
* வைகாசி மாதம், விசாக நட்சத்திர நாளில் சிவபெருமானை வழிபட்டால் பிறப்பறுத்த நிலை பெறலாம்.
* ஆனி மாதம், மூலம் நட்சத்திர நாளில் சிவபெருமானை வழிபட்டால் முயற்சி செய்யும் அனைத்துச் செயல்களிலும் வெற்றி கிடைக்கும்.
* ஆடி மாதம், உத்திராட நட்சத்திர நாளில் சிவபெருமானை வழிபட்டால் பாவங்கள் நீங்கிப் பல புண்ணியங்கள் கிடைக்கும்.
* ஆவணி மாதம், அவிட்டம் நட்சத்திர நாளில் சிவபெருமானை வழிபட்டால் தீராத கடன் தொல்லைகள் தீரும்.
* புரட்டாசி மாதம், உத்திராடம் நட்சத்திர நாளில் சிவபெருமானை வழிபட்டால் அனைத்து நலன்களையும் பெற முடியும்.
* ஐப்பசி மாதம், அசுவினி நட்சத்திர நாளில் சிவபெருமானை வழிபட்டால் நினைத்தவைகள் நிறைவேறும்.
* கார்த்திகை மாதம், கிருத்திகை நட்சத்திர நாளில் சிவபெருமானை வழிபட்டால் ராஜ போக வாழ்க்கை கிடைக்கும்.
* மார்கழி மாதம், திருவாதிரை நட்சத்திர நாளில் சிவபெருமானை வழிபட்டால் எல்லா வளமும் வந்து சேரும்.
* தை மாதம், பூசம் நட்சத்திர நாளில் சிவபெருமானைத் தேன் கொண்டு அபிஷேகம் செய்து வழிபட்டால் ஆயுள் அதிகரிக்கும்.
* மாசி மாத மக நட்சத்திர நாளில் பஞ்சவர்ண ஆடையினைச் சார்த்திச் சிவபெருமானை வழிபட்டால் சிவ தீட்சை கிடைக்கும்.
* பங்குனி மாதம், உத்திரம் நட்சத்திர நாளில் மஞ்சள் ஆடையைச் சார்த்திச் சிவபெருமானை வழிபட்டால் புண்ணியங்கள் வந்து சேரும்.