முருகப் பெருமான் பல்வேறு திருக்கோலங்களில் அடியவர்களின் வேண்டுதல் நிலைக்கு ஏற்ப உருவம் கொண்டு, எழுந்தருளிக் குறைகளை களைந்து அருள் செய்கிறார். அத்திருவுருவங்கள் குறித்து;
முருகப்பெருமானின் குழந்தை வடிவங்கள் ஆறு.
1. பாலசுப்ரமணியர்
2. காங்கேயர்
3. கார்த்திகேயன்
4. குழந்தை வேலன்
5. சரவணபவன்
6. ஸ்கந்தன்
பிரம்மச்சாரி வடிவங்கள் மூன்று.
1. தேசிக சுப்பிரமணியர்
2. குருபரன்
3. ஞான சக்திதரன்
வீர வடிவில்(பராக்கிரம வடிவில்) பத்து.
1. அஜாரூடர்
2. சேனாபதி
3. சசிவாகனர்
4. வில்லேந்திய வேலன்
5. கஜாரூடர்
6. பிரம்ம சாஸ்தா
7. தாரகாரி
8. கிளௌஞ்ச பேதனர்
9. சகலகலாவல்லப மூர்த்தி
10. வராக ஹோன்மத்த பங்க மூர்த்தி
தேவியருடன் காட்சி தரும் முருகன் நான்கு.
1. தேவசேனாதிபதி
2. வள்ளி கல்யாணமூர்த்தி
3. ஷண்முகர்
4. குமாரர்
மயில் மீது அமர்ந்து மூன்று நிலைகளில்...
1. ஷண்முகன்
2. சசிவாகனன்
3. தேசிக சுப்பிரமணியன்
பிற நிலைகளில்...
1. இரு திருக்கரங்களை உடையவர் சாத்வீக மூர்த்தி
2. நான்கு திருக்கரங்களை உடையவர் இராசத மூர்த்தி
3. நான்கிற்கும் மேற்பட்ட கரங்களை உடையவர் தாமச மூர்த்திகள்
என்றும் புராணங்களில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.