1. சிவசின்னங்களாக போற்றப்படுபவை - திருநீறு, ருத்ராட்சம், நமசிவாய மந்திரம்.
2. சிவனுக்கு அன்னாபிஷேகம் நடக்கும் காலம் - ஐப்பசி மாதம் பவுர்ணமி நாள்.
3. சிவன் யோகியாக இருந்து ஞானத்தை அருளும் கோலம் - தட்சிணாமூர்த்தி.
4. ஆன்மாவைக் குறிக்கும் சிவன் இருக்குமிடம் - திருப்பெருந்துறை (ஆவுடையார் கோயில்).
5. காலனை உதைத்த காலசம்ஹார மூர்த்தியாக சிவன் இருக்கும் தலம் - திருக்கடையூர்.
6. ஞானசம்பந்தரைக் காண சிவன் நந்தியை விலகச் சொன்ன இடம் - பட்டீஸ்வரம்.
7. சிவன் நெருப்பாக வளர்ந்து நின்ற தலம் - திருவண்ணாமலை.
8. சிவாம்சமாகப் போற்றப்படும் ராமபக்தர் - அனுமன்.
9. சிவபெருமான் ஆடிய நாட்டியங்கள் - 108.
10. சிவபெருமானின் நடனத்தை காணும் பேறு பெற்ற பெண் அடியவர் - காரைக்காலம்மையார்.
11. நடராஜருக்குரிய திருவாதிரை பிரசாதம் - களி.
12. சிவன் வீரச்செயல் நிகழ்த்திய தலங்கள் - எட்டு.
13. மகாசிவராத்திரி கொண்டாடப்படும் நாள் - மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தசி.
14. பிச்சைப் பெருமான் என்று குறிப்பிடப்படும் பிட்சாடனர் - சிவனின் ஒரு வடிவம்.
15. சிவபெருமானுக்கு பிரியமான வேதம் - சாமவேதம்.
16. சிவமூர்த்தங்களில் கருணாமூர்த்தியாக திகழ்பவர் - சோமாஸ்கந்தர்.
17. பஞ்சபூதங்களில் காற்றுக்குரிய சிவன் வீற்றிருக்கும் இடம் - காளஹஸ்தி.
18. சிவலிங்கத்தின் பாகங்கள் - மூன்று (பிரம்ம, விஷ்ணு, ருத்ரபாகம்).
19. சிவபெருமானின் நடனத்தை தரிசிக்க தவமிருந்தவர்கள் - வியாக்ரபாதர், பதஞ்சலி.
20. சிவபெருமான் யாருக்குப் பாற்கடலை வரவழைத்தார் - உபமன்யு.
21. சிவசந்நிதியின் பின்புறம் மேற்கு நோக்கி கோஷ்டத்தில் இருப்பவர் - லிங்கோத்பவர்.
22. சிவனைப் போற்றும் சைவ சாத்திரங்களின் எண்ணிக்கை - 14.
23. சிவனுக்குரிய மூர்த்தங்கள் (சிலை வடிவங்கள்) - 64.
24. சிவனுக்கு உகந்த விரதம் - சோமவார விரதம் (திங்கள் கிழமை).
25. சிவனின் கண்ணாகப் போற்றப்படும் பொருள் - ருத்ராட்சம்