உலகில் 87 லட்சம் (8.7 மில்லியன்) உயிரின வகைகள் இருப்பதாக தற்கால அறிவியலாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்து சமயப் புராணங்களும் இதற்கு நெருக்கமான ஒரு எண்ணிக்கையைக் குறிப்பிடுகின்றது.
நம்முடைய புராணங்களில் ஒன்றான பத்மபுராணத்தில், இந்த உலகத்தில் 84 லட்சம் (8.4 மில்லியன்) உயிர் வாழினங்கள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. அவற்றுள்;
900,000 வகை நீர்வாழ் உயிரினங்கள்
2,000,000 வகை தாவர உயிரினங்கள்
1,100,000 வகை பூச்சியினங்களும் முதுகெலும்பில்லா உயிரினங்கள்
1,000,000 வகை பறவையினங்கள்
3,000,000 வகை இராட்சத மிருக இனங்களும் பல்லியினங்களும்
400,000 வகை பாலூட்டியினங்கள்
ஏழு வகை பிறப்புகளில் ஆறுவகை பிறப்புகள் மேலே கூறப்பட்டுள்ளன. ஏழாவது வகை என்பது தேவர்கள். பூமியிலே பல நல்ல செயல்கள் செய்து வாழ்ந்தவர்கள் வானுறையும் தேவர்களில் ஒருவராகப் பிறப்பெடுப்பார்கள். முக்திநிலை அடையும் வரை இவ்வாறு பல பிறவிகளாகப் பிறப்பெடுப்பார்கள். பிறவாநிலையே ஓர் ஆன்மாவுக்கு நிலையான முடிவாகும்.