சரஸ்வதி - சில குறிப்புகள்
கணேஷ் அரவிந்த்
* சரஸ்வதி நாக்கில் வீற்றிருப்பதாகச் சொல்வர். அதனால் அவருக்கு ‘நாமகள்’ என்கிற சிறப்புப் பெயர் ஏற்பட்டது.
* 'சரஸ்' என்பதன் பொருள் - நீர், ஒளி.
* கலைமகளுக்குரிய நட்சத்திரம் - மூலம்.
* பிரம்மனின் மனைவி எனும் பொருளில் சரஸ்வதியை ‘பிராஹ்மி’ என்றும் அழைக்கின்றனர்.
* வட நாட்டில் சரஸ்வதியின் வாகனமாக அன்னப்பறவை வைக்கப்பட்டிருக்கிறது.
* குமரகுருபரர் பாடிய சரஸ்வதி துதி - சகலகலாவல்லி மாலை
* கூத்தனூர் சரஸ்வதி கொயிலைக் கட்டியவர் - ஒட்டக்கூத்தர்
* மத்திய அரசின் ஞானபீட விருதின் சின்னம் - வாக்தேவி ( சரஸ்வதி )
* நாமகள் இலம்பகம் இடம் பெற்றுள்ள காப்பியம் - சீவக சிந்தாமணி
* சரஸ்வதி மீது கம்பர் பாடிய நூல் - சரசுவதி அந்தாதி
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.