திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் அதிகமாக வழிபடப்படும் கிராமக் கடவுளான சாஸ்தாவின் உருவம் எட்டு வகையாக வடிவமைக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்டு வருகிறது.
இந்த எட்டு வகையான சாஸ்தாக்களையும் வடமொழிப் பயன்பாட்டில்
”அஷ்டசாஸ்தா” என்கின்றனர்.
1. சந்திரனைப் போல் குளிர்ச்சியான அருளை வழங்கி இல்லற வாழ்க்கையை இனிமையாக்ககக் கூடியவராக இருக்கும் வடிவிலான சாஸ்தா -
சம்மோகன சாஸ்தா
2. திருமணத் தடைகளை நீக்கித் திருமணத்தை விரைவில் நடத்திட உதவும் வடிவிலிருக்கும் சாஸ்தா -
கல்யாண வரத சாஸ்தா
3. இறை பக்தியுடன் ஆன்மிகப் பணியில் மகிழ்ச்சி தேடுபவர்களுக்கு உதவும் வடிவிலான சாஸ்தா -
வேத சாஸ்தா
4. குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்குக் குழந்தைகளை அளித்து, அக்குழந்தைகளின் வழியாகக் குடும்பத்தில் மகிழ்ச்சியடையச் செய்யும் வடிவில் அமைக்கப்பட்ட சாஸ்தா -
சந்தான ப்ராப்தி சாஸ்தா
5. வாழ்க்கையில் வரும் அனைத்து தோசங்களையும் நீக்கிப் பெரும் மகிழ்ச்சியளிக்கும் வடிவில் அமைந்த சாஸ்தா -
மகா சாஸ்தா
6. கல்விச் சிறப்புகளை உருவாக்கிக் கொடுக்கும் வடிவத்திலான சாஸ்தா -
ஞான சாஸ்தா
7. சனிக்கிரகத் தோசத்தினால் வரும் துன்பங்களிலிருந்து காத்தருளும் சாஸ்தா -
தரும சாஸ்தா
8. தீயசக்திகளிடமிருந்து காக்கும் கடவுளாகக் குதிரை மீது அமர்ந்த நிலையில் இருக்கும் சாஸ்தா -
வீர சாஸ்தா
இந்த எட்டு சாஸ்தாக்களையும் வழிபடுபவர்களுக்கு வாழ்க்கையில் அனைத்து வளங்களும் கிடைப்பதுடன், மகிழ்ச்சியும் சேர்ந்து கிடைக்கும் என்பது சாஸ்தாவை வழிபடுபவர்களின் நம்பிக்கையாக இருக்கிறது.