பிரம்மா வழிபாடு
கணேஷ் அரவிந்த்
இராஜஸ்தான் மாநிலம் அஜ்மீருக்கு அருகில் புஷ்கர் என்ற இடத்திலும், தமிழ்நாட்டில் தஞ்சை மாவட்டம் திருகண்டியூர், திருச்சியை அடுத்த உத்தமர் கோயில், கரூர் மாவட்டம் கொடுமுடி, திருநெல்வேலி அருகில் பிரம்மதேசம், திருச்சி அருகில் திருப்பட்டூர் என்று இந்தியா முழுவதும் ஆறு இடங்களில் மட்டுமே பிரம்மாவுக்குக் கோயில் அல்லது தனிச்சன்னதி இருக்கின்றன. இவற்றுள் சிவபெருமானிடம் பிரம்மன் சாப விமோசனம் பெற்றதாகக் கருதப்படும் திருப்பட்டூரில் ஆறு அடி உயரத்தில், ஆறு அடி சுற்றளவில் முன்பக்கம் மூன்று முகங்களும் பின்புறம் ஒரு முகம் என்று நான்கு முகங்களுடன் காட்சியளிக்கும் பிரம்மதேவன், தனது வலது கையில் ருத்ராட்ச மாலையையும், இடது கையில் கமண்டலத்தையும் கொண்டு காட்சியளிக்கிறார். இந்தியாவிலேயே மிகப்பெரிய பிரம்மன் சிலை இங்கு மட்டுமே இருக்கிறது. இங்குள்ள பிரம்மனைத் திங்கள் அல்லது வியாழக்கிழமைகளில் வழிபட்டால், விதிப்பலனால் ஏற்பட்ட அனைத்து இழப்புகளையும் திரும்பப் பெற்று, சிறப்பான நல்வாழ்க்கையைப் பெற முடியும் என்பது ஒரு தொன்ம நம்பிக்கை.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.