ஆகமம் கடவுளிடத்து வந்த நூல். வேதாகமங்கள் எல்லாப் பொருள்களின் இயல்புகளையும் கூறுதலின் , முதனூல் எனப்படும். ஆகமம் இருபத்தெட்டு. இவை சதாசிவ மூர்த்தியின் ஐந்து திருமுகங்களினின்றும் தோன்றித் சுத்த வித்தியா தத்துவத்திலிருந்து சதாசிவனால் உபதேசிக்கப்பட்டனவாம். ஆகமங்கள் வருமாறு;
1. காமிகம்
2. யோகஜம்
3. சிந்தியம்
4. காரணம்
5. அசிதம்
6. தீப்தம்
7. சூக்குமம்
8. சகச்சிரம்
9. அஞ்சுமான்
10. சுப்பிரபேதம்
11. விசயம்
12. நிச்சுவாசம்
13. சுவாயம்புவம்
14. ஆக்கினேயம்
|
15. வீரம்
16. ரௌரவம்
17. மகுடம்
18. விமலம்
19. சந்திரஞானம்
20. முகவிம்பம்
21. புரோற்கீதம்
22. இலளிதம்
23. சித்தம்
24. சந்தானம்
25. சர்வோக்தம்
26. பாரமேசுரம்
27. கிரணம்
28. வாதுளம்
|
குறிப்பு:
ஆ - சிவஞானம், க - மோட்ச சாதனம், ம - மலநாசம் எனப் பொருள் கொண்டு, ஆகமம் ஆன்மாக்களுக்கு மலத்தை நாசஞ் செய்து ஞானத்தை உதுப்பித்து மோட்சம் கொடுப்பதற்காக உபதேசிக்கப்பட்ட நூல் எனவும், ஆ - பசு, கம் - பதி, ம - பாசம் எனப் பொருள் கொண்டு பதி, பசு, பாசம் என்பவற்றின் இலக்கணங்களை விரித்துணர்த்தும் நூல் எனவும் கூறுவர்.