ஒவ்வொருவரும் செய்யும் புண்ணிய, பாவங்களைக் கணிப்பவர், சித்திர புத்திரனார் என்பது நம்பிக்கை, நாம் செய்யும் புண்ணிய, பாவங்களை நமது இறப்பின் பின் கணித்து அதற்கேற்ப மோட்சமோ, நரகமோ, மறு பிறவியில் பெறும் உருவமோ வழங்கப்படும் என்பது இந்துக்களின் நம்பிக்கையாக இருக்கிறது. சித்ரா பெளர்ணமி விரத நாளில்தான் சித்திரப்தன் தோன்றினான் என்று புராணங்கள் தெரிவிக்கின்றன.
ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதத்தில் வரும் பெளர்ணமி நாளில் சித்ரகுப்தருக்கு திருவிழா நடத்தப்படும். சித்ரகுப்தனின் மனைவி கர்ணகி. இவர்களுக்கு திருமணம் நடந்ததும் சித்திரை மாத பெளர்ணமி நாளில்தான் என்று சொல்லப்படுகிறது. சித்ரா பெளர்ணமி அன்று சித்ரகுப்த விரதம் இருப்பவர்கள், பகலில் விநாயகரை முதலில் வணங்கி, உப்பு சேர்க்காத உணவு உண்டு, மாலை வேளையில் பெளர்ணமி நிலவு வானில் வந்ததும் தரிசித்துச் சித்ரகுப்த பூஜையினைச் செய்ய வேண்டும். பூஜையில் வைக்கும் பிரசாதங்களை முடிந்த அளவில் ஏழைகளுக்கு தானமாக வழங்க வேண்டும்.
சித்ரகுப்தரை வழிபடுவதற்கான சுலோகம்:
“யமாய தர்மராஜாய ம்ருத்யவேச அந்தகாயச
வைவஸ்வதாய காலாய ஸர்வபூத க்ஷயாய ச
ஒளமதும்பராய தத்னா ய நீலாய பரமேஷ்டினே
விருகோதராய சித்ராய சித்ரகுப்தாய வை நம:
சித்ரகுப்த காயத்ரி:
ஓம் தத்புருஷாய வித்மஹே
சித்ரகுப்தாய தீமஹி
தந்நோ: லோகப் ப்ரச்சோதயாத்வ்”
சிறப்புகள் கூடிய தினமான சித்ரா பெள்ர்ணமி அன்று சித்திரகுப்தனை வழிபட்டு அனைத்து நலன்களையும் பெறுவோம்.