1. பிரம்மா - மூச்சுக்காற்றை அளிப்பவர்; பெரியவர்
2. ஆத்மபூ - தான் தோன்றி
3. சுரஜேஷ்ட - தேவர்களில் மூத்தவர், பெரியவர்
4. பரமேஷ்டி - பெரிய ஆசையான மோட்சத்தை தருபவர்; யாகத்தால் பூஜிக்கப்படுபவர்; இதயத் தாமரையில் வீற்றிருப்பவர்.
5. பிதாமஹர் - பாட்டனார்
6. ஹிரண்யகர்ப்பர் - தங்க முட்டை (யிலிருந்து வந்தவர்)
7. லோகேச - மக்கள் ஈசன், உலகு இயற்றினான்
8. ஸ்வயம்பூ - தான் தோன்றி (இது ஸ்வயம்பூ லிங்கமாகத் தோன்றும் சிவ பெருமானுக்கும் உள்ள பெயர்)
9. சதுரானானன - நான்முகன் ( நாற்புறமும் பார்வை உடையவர்)
10. தாதா - உயர் தலைவன்
11. த்ருஹினஹ - படைப்போன்
12. அப்ஜயோனி - தாமரையில் உதித்தோன்
13. கமலாசன - தாமரையில் அமர்ந்தோன்
14. ஷ்ரஷ்ட - உலகைப் படைத்தோன்
15. பிரஜாபதி - மக்களை உருவாக்கியவன்; படைத்தோன்
16. வேதா - வேதம் உடையோன்
17. விஸ்வஸ்ரு - எல்லாம் அறிந்தவன் (கேட்பவன்)
18. விதாதா - உயர் தலவன்
19. விதி - வேதம் உடையவன்; விதிகளை எழுதுபவன்
20. நாபிஜன்ம - நாபியில் (தொப்புள்) உதித்தோன்
21. பூர்வ - முன்னோன்
22. கமலோத்பவ - தாமரையில் உதித்தோன்
23. சதானந்த - எப்போதும் மகிழ்பவன்
24. நிதன - மரணம் எனப் பொருள்; ஆயினும் பிரம்மாவுக்கு இது எப்படிப் பொருந்தும் என்று தெரியவில்லை
25. ரஜோ மூர்த்தி - ரஜோ குணம் உடையவர்
26. சத்யக - உண்மை விளம்பி
27. ஹம்சவாஹன - அன்னப் பறவை வாகனம் உடையோன்
28. விரிஞ்சி - உலகைப் படைத்தோன்
29. அண்டஜ - முட்டையில் உதித்தோன்