முருகத் தத்துவம்
சித்ரா பலவேசம்
உண்ட உணவு மலமாகி வெளிப்படுகிறது. இதைக் கழிவுப்பொருள் என்கிறோம். நம் உடலானது வியர்வை, சிறுநீர், மலம் என்னும் மூன்று மலங்களை வெளிப்படுத்துகிறது. இது போல நம் உணர்வும் ஆணவம், கன்மம், மாயை எனும் மூன்று மலங்களை வெளிப்படுத்துகிறது என்று சமய நெறிகள் சொல்கின்றன. இதைப் பொதுநெறிச் சிந்தனையாளர்கள் காமம், வெகுளி, மயக்கம் என மூன்றாகச் சொல்கின்றனர்.
சூரபதுமன், சிங்கமுகன், தாரகாசுரன் எனும் மூவரும் ஆணவம், கன்மம், மாயை எனும் மும்மலங்கள் என்றும், அவர்களால் சிறையிடப்பட்ட தேவர்கள் பசு (ஆன்மா) வர்க்கங்கள் என்றும், அசுரர்கள் மூவரையும் அழித்து முருகன் தேவர்களை ஆட்கொண்டமை மும்மலங்களை அழித்து உயிரை ஞானாசிரியனான கடவுள் ஆட்கொண்டருளுதல் என்கிறது முருகத்தத்துவம்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.