1. விநாயகர் - ஒரு முறை சுற்றி வர வேண்டும்.
2. சூரியன் - சூரியனை வணங்கும் போது, நம்மை நாமே இரண்டு முறை சுற்றிக் கொள்ள வேண்டும். தன்னைத் தானே சுற்றிக் கொண்டு வணங்குவது ஆத்ம பிரதட்சிணம். காலையில் சூரிய வழிபாடு செய்யும் போது மட்டும் இதைச் செய்ய வேண்டும்.
3. சிவன் - கோயிலில் மூன்று முறை சுற்றி வர வேண்டும்.
4. விஷ்ணு - கோயிலில் நான்கு முறை சுற்றி வர வேண்டும்.
5. முருகப்பெருமான் - ஐந்து முறை சுற்றி வர வேண்டும்.
6. மகாலட்சுமி - ஐந்து முறை சுற்றி வர வேண்டும்.
7. பார்வதி - ஐந்து முறை சுற்றி வர வேண்டும்.
8. அரசமரம் - ஏழு முறைக்குக் குறையாமல் சுற்றி வர வேண்டும். அரசமரத்தைப் பகல் நேரத்தில் மட்டுமே சுற்றி வர வேண்டும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
9. நவக்கிரகங்கள் - ஒன்பது முறை சுற்றி வந்து வணங்க வேண்டும்.
* கோவிலில் பிரகாரத்தைச் சுற்றி வருவதால் முற்பிறவியில் செய்த பாவம் நீங்கும். அப்படி வலம் வரும் போது, நிறைமாத கர்ப்பிணி நடப்பது போல மெதுவாகவும், தெய்வ சிந்தனையுடனும் வலம் வர வேண்டும்.
** கோயிலைச் சுற்றி வரும் போது, ஓடுவது, வேகமாக நடப்பது, சப்தம் எழுப்புவது, தேவையற்றதை பேசிக்கொண்டே வருவது போன்றவை தவறானது. இதனால் எந்தப் பயனும் கிடைக்காது.