பிரதோச அபிசேகப் பலன்கள்
மு. சு. முத்துக்கமலம்
ஒவ்வொரு பிரதோசத்தின் பொழுதும் , சிவலிங்கத்திற்கு செய்யப்படும் அபிசேகங்களைக் கொண்டு, அதற்கான பலன்கள் கிடைக்கும். அவை;
1. பசும் பால் – தீராத நோய்கள் தீரும். நீண்ட ஆயுள் உண்டாகும்.
2. பசுந்தயிர் – குழந்தை பாக்கியம் உண்டாகும்.
3. தேன் – இனிய குரல் வளமும், இசை ஞானமும் உண்டாகும்.
4. இளநீர் – அரசாங்கப் பதவிகள் உண்டாகும்.
5. சர்க்கரை – எதிர்ப்புகள் அகலும்.
6. சந்தனம் – செல்வச் செழிப்பு உண்டாகும்.
7. பன்னீர் – நிலையான புகழ் உண்டாகும்.
8. பச்சைக் கற்பூரம் – மன அமைதி உண்டாகும். மனோபலம் (Mind Power) அதிகரிக்கும்.
9. குங்குமப்பூ – தெய்வீகத்தன்மை உண்டாகும்.
10. கஸ்தூரி – நிலையான வெற்றி உண்டாகும்.
11. நல்லெண்ணெய் – சுகமான வாழ்வு உண்டாகும்.
12. விபூதி – ஞானமும், கல்வியும் உண்டாகும்.
13. அரிசி மாவுப் பொடி – தீராத கடன் தொல்லைகள் தீரும்.
14. நெல்லிக்காய்ப் பொடி – தீராத கவலைகள் தீரும்.
15. பழச்சாறு – திருமணத் தடைகள் விலகும்.
16. பஞ்சாமிர்தம் – வம்ச விருத்தி உண்டாகும்.
17. கரும்புச்சாறு – மிக உயர்ந்த பதவிகள் உண்டாகும்.
18. புஷ்பாபிஷேகம் – தெய்வ தரிசனம் உண்டாகும்.
19. கலச தீர்த்தத்தை மகன்யாச ஏகாகதச ருத்ர ஜபம் செய்து அபிஷேகம் – நவகிரக தோஷங்கள் அனைத்தும் விலகும்.
20. வலம்புரிச் சங்கில், கங்கை நீரை நிரப்பி, ஸ்ரீ ருத்ரம் ஜபித்து அபிஷேகம் – ஏழு பிறவிகளிலும் ஒருவர் செய்த அனைத்து பாவங்களும் நீங்கி, அனைத்து நன்மைகளும் உண்டாகும்.