திருமாலை முதன்மை தெய்வமாகக் கொண்ட வைஷ்ணவத்தில் பஞ்ச சம்ஸ்காரம் என்பது, ஐந்து புனிதமாக்கும் வழிகள் பற்றிய முக்கிய சடங்குகளைக் குறிப்பிடுகிறது. வைஷ்ணவத்தைப் பின்பற்றிஹ் திருமால் திருவடியை அடைய விரும்புவர்கள், ஆண், பெண், சாதி வேறுபாடு இன்றி, ஒவ்வொருவரும் நடைமுறைப்படுத்த வேண்டிய ஒன்று. அவைகளை அவரவர்களின் ஆச்சார்யர்கள் அவர்களுக்கு அறிமுகப்படுத்தி சொல்லிக் கொடுப்பார்கள். பஞ்ச சம்ஸ்காரம் என்பன,
1. சங்கு சக்கர முத்திரை பதித்தல் – பக்தர்களின் பக்தர்களின் வலது மற்றும் இடது தோள்பட்டையின் மேல் புறத்தில் பெருமாளின் சங்கு சக்கர முத்திரைகள் பதிக்கப்படுத்தல்.
2. திருமண் காப்பிடுதல் – சீடரின் நெற்றி, கழுத்து, மார்பு, தோள் பட்டை, வயிறு, முதுகு, ஆகிய ஆறு இடங்களில் விஷணுவின் 12 சிறப்பு நாமங்களை (பெயர்களை) சொல்லிக் கொடுத்து காப்பிடக் கற்றுக் கொடுத்தல்.
3. தாஸ்ய நாமம் சூட்டுதல் – வைஷ்ண ஆச்சார்யார்களில் மிகவும் முக்கியமான ஆச்சார்யார்களில் ஒருவரான இராமானுஜரின் சம்பந்தத்தை ஏற்படுத்தி, சீடர்களுக்கு, ராமானுஜதாசன் என்று பெயரிடுதல்.
4. மந்திர தீட்சை அளித்தல் – வைஷ்ணவத்தின் மூன்று முக்கியமான மந்திரங்களான, துவயம், (இரண்டு வரி மந்திரம்), சரமஸ்லோகம் மற்றும் திருமந்திரம் (8 எழுத்து மந்திரம்) ஆகியவற்றைச் சொல்லிக் கொடுத்து அதன் பொருள்களையும் தெரியப்படுத்துதல்.
5. யக்ஞம் – விஷ்ணுவை வழிபடும் திருஆராதனம் செய்யும் முறைகள், சீடர்கள் பின்பற்ற வேண்டிய உணவு முறைகள் மற்றும் பிற பக்தர்களுடன் நடந்து கொள்ள வேண்டிய முறைகள் பற்றி விளக்குதல்.