கிருத யுகம், திரேதா யுகம், துவாபர யுகம் மற்றும் கலி யுகம் என்று நான்கு யுகங்கள் இருக்கின்றன. இப்பொழுது கலியுகம் தொடங்கி சுமார் 5000 ஆண்டுகள் ஆகின்றன. ஒவ்வொரு யுகமும் கால அளவில் மாறுபட்டவை. கலியுகத்தை விட, துவாபரயுகம் இரண்டு மடங்கும், திரேதாயுகம் மூன்று மடங்கும், கிருதாயுகம் நான்கு மடங்கும் பெரியது. அதாவது;
கிருத யுகம் – 1,728,000 வருடங்கள்
திரேதா யுகம் – 1,296,000 வருடங்கள்
துவாபர யுகம் – 864,000 வருடங்கள்
கலியுகம் – 432,000 வருடங்கள்
மேற்காணும் நான்கு யுகங்களும் சேர்ந்ததை ஒரு சதுர்யுகம் என்று சொல்கின்றனர். கிருத, திரேதா, துவாபர மற்றும் கலி என்ற இந்த நான்கு யுகங்களும் ஒரு சுழற்சியில் வந்து கொண்டு இருக்கும். இந்தச் சுழற்சியை பிரம்மம் அல்லது இறைவன் விஷ்ணு நடத்திக் கொண்டு இருக்கிறார். விஷ்ணு அல்லது பிரம்மம் ஆனவர், கிருத யுகத்தில் வெண்மையாகவும், திரேதா யுகத்தில் சிவப்பாகவும், துவாபர யுகத்தில் கருநீலமாகவும், கலியுகத்தில் கருப்பாகவும் காட்சி அளிப்பார்.