துர்க்கை என்ற சொல்லில் ‘த்’, ‘உ’, ‘ர்’, ‘க்’, ‘ஆ’ என்ற ஐந்து அட்சரங்கள் உள்ளன. ‘த்’ என்றால் அசுரர்களை அழிப்பவள், ‘உ’ என்றால் விக்னத்தை (இடையூறை) அகற்றுபவள், ‘ர்’ என்றால் ரோகத்தை விரட்டுபவள், ‘க்’ என்றால் பாபத்தை நலியச் செய்பவள், ‘ஆ’ என்றால் பயம் சத்ரு இவற்றை அழிப்பவள் என்பது பொருளாகும். துர்க்கையை 1. குமாரி, 2. த்ரிமூர்த்தி, 3. கல்யாணி, 4. ரோஹிணி, 5. காளிகா, 6. சண்டிகை, 7. சாம்பவி, 8. துர்கா, 9. சுபத்ரா என்று ஒன்பது பெயரில் மந்திர சாஸ்திரம் நூல் குறிப்பிடுகிறது. சுவாஸினி பூஜையில் 1. சைலபுத்ரி, 2. ப்ரம்ஹசாரிணி, 3. சந்த்ரகண்டா, 4. கூஷ்மாண்டா, 5. மகாகௌரி, 6. காத்யாயனி, 7. காளராத்ரி, 8. மகாகௌரி, 9. சித்திதார்ரி என்ற ஒன்பது துர்க்கைகள் இடம் பெறுகின்றனர்.
வழிபாட்டுப் பலன்கள்
1. மனிதப் பிறவியில் வரும் துன்பங்களைப் போக்கி அருள்பவளே துர்காதேவி.
2. அஷ்டமி நாளில் துர்க்கைக்கு அரளி, ரோஜா, செந்தாமரை, செம்பருத்தி போன்ற சிவப்பு மலர்கள் கொண்டு அர்ச்சனை செய்யலாம். அம்பாளுக்குச் சிவப்பு ஆடை அணிவிக்கலாம்.
3. துர்க்கைக்கு நல்லெண்ணை தீபம் ஏற்றி, சண்டிகைதேவி சகஸ்ர நாமம் கொண்டு தான் அர்ச்சனை செய்ய வேண்டும்.
4. துர்க்கையின் அற்புதத்தை விளக்கும் துர்கா சப்தசதி என்ற 700 சுலோகங்கள் படிப்பது நல்ல மனநிலையைத் தரும்.
5. வழக்குகளில் வெற்றி பெறவும், சிறை வாசத்திலிருந்து விடுபடவும் துர்க்கா தேவியைச் சரணடைந்தால், வெற்றி கிடைக்கும்.
6. துர்க்கை வழிபாடு மனத்தெளிவைத் தரும்.
7. துர்க்கையை வழிபடுபவர்களுக்கு பயம் குறையும்.
8. துர்க்காவை வழிபாடு செய்தவர்க்கள் சொர்க்க சுகத்தை அனுபவித்து, நற்கதியும் அடைவர்.
9. துர்க்காவை வழிபடுபவரிடம் சோகங்கள் எதுவும் இருப்பதில்லை.
10. துர்க்கை என்ற பெயரையும், சதாக்சி என்ற பெயரையும் சொல்பவர்கள், மாயையிலிருந்து விடுபடுவர்.