1. விரதத்தின் போது வீட்டுக்கு விலக்கான பெண்களின் அருகாமையைத் தவிர்க்க வேண்டும். அவர்களிடம் பேசுவதையும், அவர்கள் கையால் உணவு அருந்துவதையும் தவிர்க்க வேண்டும்.
2. விரத காலங்களில் மது, புகையிலை, சிகரெட் போன்ற பொருட்களைப் பயன்படுத்தக் கூடாது.
3. பக்தர்கள் பகல் நேரத்தில் உறங்குவதைத் தவிர்க்க வேண்டும்.
4. இறந்தவர்களின் வீடுகளுக்குச் சென்று துக்கத்தில் பங்கேற்கக் கூடாது. வீட்டில் உள்ளவர்களும் மலைக்குச் சென்று திரும்பும் வரை துக்கம் கேட்கக் கூடாது.
5. தவிர்க்க இயலாத அல்லது குடும்பத்தில் ஏதேனும் இறப்பு நடந்து விட்டால் உடன் மாலையைக் கழற்றிவிட வேண்டும்.
6. எண்ணெய் தேய்த்துக் குளிப்பது, சவரம் செய்து கொள்வதை தவிர்க்க வேண்டும்.
8. விரத காலத்தில் அசைவ உணவு உண்ணுவது மாபெரும் தவறாகும். மாலை தரித்த வீட்டைத் தவிர, மற்றவர்கள் வீட்டில் எக்காரணத்தை கொண்டும் உணவு உண்ணக் கூடாது.
9. முதல் வருடம் மலைக்குச் செல்லும் ஐயப்பமார்கள் கன்னி பூஜையை அவசியம் செய்ய வேண்டும் என்கிறார்கள். வசதியில்லாத பட்சத்தில் அதனைச் செய்ய வேண்டியதில்லை.
10. மாலை போடுதல், இருமுடி கட்டுதல் மிகவும் புனிதமான நிகழ்வாகும். இதனை விளம்பரப்படுத்திக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
13. களவு, சூதாடுதல், பொய், திரைப்படங்கள், விளையாட்டு, வேடிக்கைகள், உல்லாசப் பயணங்கள், போதையூட்டும் பொருட் கள், புகைப் பிடித்தல் தவிர்க்க வேண்டும்.
14. இருமுடி தாங்குபவர்களுக்கு பூ மாலை அணிவித்து அடுத்த நிமிடமே அந்த பூக்கள் மற்றவர்கள் காலில் பட்டு சீரழிவது விரும்பத்தக்க செயல் அல்ல.
15. மனம், வாக்கு, செயல் ஆகிய மூன்றிலும் காம இச்சையைத் தவிர்க்க வேண்டும். மது, மாமிசம், போதை தரும் பொருட்கள் ஆகியவற்றை அறவே ஒழிக்க வேண்டும்.
16. சபரிமலை யாத்திரையின் போது கன்னி சாமிகள் தான் எல்லா வேலைகளையும் செய்ய வேண்டும் என்று நிர்பந்திப்பது தவறானது. பக்தியும் பணிவும் எல்லோருக்கும் பொதுவான ஒன்று.
17. சபரிமலை யாத்திரையின் போது மிகவும் ஆடம்பரமான விருந்து உண்ணுதலைத் தவிர்த்திட வேண்டும்.
18. பம்பை நதிக்கரையில் ‘பம்பாசத்யா’ எனும்அன்னதானம் செய்யவேண்டும். சாப்பிட்ட இலைகளை, புனிதமான பம்பை நதியில் எறிந்து அப்புண்ணிய நதியை அசுத்தப்படுத்துவது மிகவும் தவறான செயலாகும்.
19. சபரிமலை யாத்திரை முடிந்தவுடன் வீட்டிற்கு வந்த பிறகே மாலையைக் கழற்ற வேண்டும். பம்பையிலோ நடுவழியிலோ மாலையைக் கழற்றக் கூடாது.
20. ஐயப்பன் வழிபாட்டை ஆவேசத்துக்கும், ஆக்ரோஷத்துக்கும், ஆடம்பரத்துக்கும் உட்படுத்தாமல் அமைதியாகவும், சாத்வீகமாகவும் இந்த விரதத்தை ஆண்டு தோறும் நாம் கடைபிடித்தால் ஓய்வில்லாமல் வாழும் நமக்கு ஓய்வு, மன அமைதி, ஆத்மபலம், நற்சிந்தனை ஆகியவை கிடைக்கின்றன.