கேரள மாநிலத்தில் பெரும்பாலான சிவபெருமான் கோயில்களின் கருவறையில் சிவன் மட்டுமே தனித்து இருப்பார், அம்மன் இருப்பதில்லை.
சிவபெருமான் தனித்திருக்கும் கோயில்களில் கருவறையை இடமிருந்து சுற்றி வரும் போது, கோமுகி வரை சென்று, பின் அதே வழியில் திரும்பி வந்து இறைவனைத் தரிசனம் செய்து வழிபட்டு, பின் வலப்புறம் சென்று கோமுகியை வணங்கி விட்டு பின் வெளியில் வருவார்கள்.
ஏனெனில், சிவபெருமான், இறைவி இல்லாமல் தனியாகக் கருவறையில் இருக்கும் போது, சிவபெருமானின் சடைமுடியில் கங்கை இருப்பாள். சிவபெருமானுக்குச் செய்யப்படும் அபிஷேகம் அனைத்தும் கங்கா தீர்த்தமாக கோமுகி வழியாக வெளிவரும். கோமுகியைத் தாண்டினால் கங்கையை தாண்டிய குற்றம் ஏற்படும் என்று கருதுகின்றனர்.