தமிழ்நாட்டின் திருச்செந்தூர் கோயிலில் ஸ்ரீ சனத்குமாரனால் நிறுவப்பட்ட முதல் சிலை சேதமடைந்த நிலையில், புதிய சிலை ஒன்றைச் செய்து கொண்டு, பழைய சிலையினைக் கடலில் போட்டு விட்டார்கள்.
கடல் அலைகளில் அடித்துச் செல்லப்பட்டுக் கேரளாவின் வல்லார்பாடம் பகுதியில் கரை ஒதுங்கிய அந்தச் சிலையில் சேதமடைந்த பகுதி மாற்றம் செய்யப்பட்டு, இளங்குன்னபுழாவில் புதிய கோயில் ஒன்று கட்டி அந்தச் சிலை நிறுவப்பட்டிருப்பதால், அந்தக் கோயில் கேரளாவின் திருச்செந்தூர் என்று அழைக்கப்படுகிறது.
இக்கோயிலில் வழிபாடு செய்பவர்களுக்குத் திருச்செந்தூர் முருகன் கோயிலில் வழிபடுவதால் கிடைக்கும் அனைத்துப் பலன்களும் கிடைக்கும் என்கின்றனர்.
காவடி வழிபாடு
தமிழ்நாட்டில் முருகன் கோயில்களில் காவடி எடுத்து முருகப்பெருமானை வழிபடும் வழக்கத்தைப் போலக் கேரளாவின், இளங்குன்னம்புழா சுப்பிரமணிய சுவாமி கோயிலும் காவடி எடுத்து வழிபாடு செய்கின்றனர். தமிழ்நாட்டுக் காவடிகளில் மயிலிறகு கொண்டு அலங்கரித்திருப்பது போல், அங்கு அழகிய மலர்களின் வடிவில் காவடி அலங்கரிக்கப்பட்டிருக்கிறது.