முருகப்பெருமானின் பன்னிரு கரங்களில் ஒவ்வொரு கரமும் தனித்தனியாகச் சில பணிகளைச் செய்வதாகக் குறிப்பிடப்படுகிறது. அவை;
* முதல் கை - தேவர், முனிவர்கள், பக்தர்களை காக்கிறது.
* இரண்டாம் கை - முதல் கை செய்யும் வேலைக்கு மற்றொரு கை உதவி செய்கிறது.
* மூன்றாம் கை - உலகத்தை முருகன் தனது கைக்குள் அடக்கு வைத்துக் காக்கின்றார்.
* நான்காம் கை - தேவையற்ற ஆசைகளை நிராகரிக்கின்றார்.
* ஐந்தாம் கை - பக்தர்களுக்கு நிறைந்த அருளைத் தருகின்றார்.
* ஆறாம் கை - தன் தாய் கொடுத்த வேல் கொண்டு பக்தர்களைக் காக்கிறார்.
* ஏழாம் கை - சரவணபவ என்னும் சொல்லுக்குரிய பொருளை முனிவர்கள் போன்ற தவப்புதல்வர்களுக்கு மட்டும் வெளிப்படுத்தும் விதமாக மார்பின் அருகே வைத்துள்ளார்.
* எட்டாம் கை - மார்பில் இருந்து தொங்கும் மாலையை தாங்குகிறது.
* ஒன்பதாம் கை - யாகத்தினால் கிடைக்கக் கூடிய பலனை ஏற்கிறது.
* பத்தாம் கை - இதுவும் யாகத்தினால் கிடைக்கக் கூடிய பலனை ஏற்கிறது.
* பதினொன்றாம் கை - மழையைக் கொடுத்து உலகைக் காக்கிறது.
* பன்னிரண்டாம் கை – தன் மனைவிகளாகிய வள்ளி, தெய்வானைக்கு மாலை சூட்டுகிறது.