ஆலயங்களில் பத்து அல்லது பன்னிரண்டு நாட்கள் மிகச் சிறப்பாகப் பூசைகள் நடத்தி அங்குள்ள மூர்த்திகளின் திருவுருவங்களைப் பலவித வாகனங்களின் மேல் எழுந்தருளச் செய்து நடத்தும் விழாவுக்கு திருவிழா என்று பெயர். இதனை வடமொழியில் 'மகோத்ஸவம்' என்கின்றனர்.
மஹா - பெரிய,
உத் - உயர்வான
ஸவ - படைத்தல் முதலிய காரியங்கள். உயர்ந்த படைத்தல் முதலிய ஐந்தொழில்களைக் குறிக்கும் குறி என்பதாம்.
முதல் நாள் - தூல நீக்கம்
இரண்டாம் நாள் - ஸ்தூல சூக்கும நீக்கம்
மூன்றாம் நாள் - மூவினை, முக்குணம், முக்குற்றம், முப்பற்று, முப்பிறப்பு நீக்கம்
நான்காம் நாள் - நாற்கரணம் நால்வகைத்தோற்ற நீக்கம்
ஐந்தாம் நாள் - ஐம்பொறி ஐந்தவத்தை ஐம்மல நீக்கம்
ஆறாம் நாள் - காம, குரோத, லோப, மோக, மத, மாச்சரிய மென்னும் ஆறு குற்ற நீக்கம்
ஏழாம் நாள் - எழுவகைப் பிறப்பு நீக்கம்
எட்டாம் நாள் - எண்குண விளக்கம்
ஒன்பதாம் நாள் - நவபேத விளக்கம்
பத்தாம் நாள் - பரானந்தக் கடலிற் படிதல்
என்பதை உணர்த்துவதாக இருக்கின்றன.