அர்க்க பத்ர ஸ்நானம்
உ. தாமரைச்செல்வி
அர்க்கன் என்றால் சூரியன்.
சூரியனுக்கு உகந்த பத்ரமாக இருப்பதால் எருக்க இலைக்கு, “அர்க்க பத்ரம்" என்று பெயர்.
அர்க்க பத்ரம் என்பதே, பிறகு எருக்க பத்ரம், எருக்க இலை என்று ஆனது.
நோய்களும், அதனால் ஏற்படும் துன்பங்களும் சூரிய பகவானின் அருளால் நீங்க வேண்டும் என்று ரத சப்தமியன்று “அர்க்க பத்ர ஸ்நானம்’ எனப்படும் எருக்க இலைக் குளியல் நடைமுறை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
பிரம்மாவிடம் சாபம் பெற்ற நவக்கிரகங்களின் தொழுநோய் நீங்கிய நாளான தை மாதம் வரும் ரத சப்தமி நாளில் ஏழு எருக்க இலைகள், எள், மஞ்சள் கலந்த அரிசி ஆகியவற்றைத் தலையில் வைத்து நீர் நிலைகளில் குளித்துச் சூரிய வழிபாடு செய்து, பின்னர் கோயில்களுக்குச் சென்று இறைவனை வழிபட்டால், நவக்கிரகங்களால் ஏற்படும் துன்பங்கள் விலகும் என்கிற நம்பிக்கையும் பிறந்தது..
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.