விநாயகருக்கு என்னென்ன பொருட்களில் அபிஷேகம் செய்தால் என்னென்ன பலன் கிடைக்கும் என்பதை பற்றி உங்களுக்குத் தெரியுமா?
* நல்லெண்ணெய் - மனதில் தூய்மையான எண்ணங்களும் பக்தியும் உண்டாகும்.
* தண்ணீர் - மனஅமைதி ஏற்படும்.
* பஞ்சாமிர்தம் - அனைத்துச் செல்வங்களும், நீண்ட வாழ்வும் கிடைக்கும்.
* பால் - குடும்பத்தில் மகிழ்ச்சியும், ஆயுள் விருத்தியும் கிடைக்கும். தோஷங்கள் நீங்கும்.
* மஞ்சள் பொடி - அனைவரும் நமக்கு உதவ முன்வருவார்கள்.
* தயிர் - குழந்தைப்பேறு கிடைக்கும்.
* இளநீர் - துன்பங்கள் நீங்கும். மன அமைதி பெறுவதுடன் புத்தி தெளிவு பெறும்.
* கரும்புச்சாறு - நோய்கள் நீங்கும், கல்வியிலும், சாஸ்திரங்களிலும் ஆர்வமும், திறமையும் உண்டாகும்.
* அரிசி மாவு - லட்சுமி அருளால் அதிகப் பணம் வரும். கடன் தீரும்.
* சந்தனம் - உடல் குளிர்ச்சி பெறும். மனதிற்கு அமைதி கிடைக்கும். செல்வங்கள் பெருகும்.
* சொர்ணம் - நல்ல எதிர்காலத்தைக் கொடுக்கும். நினைத்த நல்ல செயல்கள் அனைத்தும் இனிதாக நடக்கும்.
* ஆடை அணிவித்தல் - கௌரவம் காக்கப்படும்.
* எலுமிச்சை பழம் அணிவித்தல் - துர்க்கையின் அருளாசி கிடைக்கும். எம பயம் நீங்கும்.
* மலர்களால் அர்ச்சனை - இல்லத்தில் இருக்கும் துன்பங்கள் நீங்கி குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். வசந்தமான வாழ்க்கை அமையும்.
* தேனபிஷேகம் - திருப்புறம்பயத் தலத்தில் சிப்பி கிளிஞ்சல் முதலான கடல்படு பொருள்களால் ஆக்கப்பெற்ற விநாயகருக்குத் தேன் அபிஷேகம் செய்தால் அனைத்து வளங்களும் கிடைக்கும்.
* திருநீறு - மகம், உத்திரம், விசாகம், கேட்டை, பூராடம் ஆகிய நட்சத்திர நாட்களில் விநாயகருக்குத் திருநீறு அபிஷேகம் செய்ய நினைத்தவை எல்லாம் நடக்கும்.
* கஸ்தூரி மஞ்சள் - மிருக சீரிஷம், பூரம், அனுஷம் ஆகிய நட்சத்திர நாட்களில் விநாயகருக்குக் கஸ்தூரி மஞ்சள் அபிஷேகம் செய்தால் வெற்றி உண்டாகும்.
* அன்னம் - பூர நட்சத்திர நாளில் விநாயகருக்கு அன்ன அபிஷேகம் செய்ய இல்லத்தில் வளம் கொழிக்கும்.