குஜராத் மாநிலத்தில் கடலோரமாக உள்ளது துவாரகை. இங்கு பஞ்ச துவாரகை, கோமதி துவாரகை என்று இருக்கின்றன. கோமதி துவாரகையில் கோமதி ஆறு கடலோடு கலக்கிறது. இந்தக் கோமதி நதியில் கிடைக்கும் கல்லைக் கோமதிச் சக்கரம் என்கின்றனர். இதனை, சொர்ணக்கல் சக்கரம் என்றும் சொல்வதுண்டு. இந்தக் கோமதி சக்கர கல்லை துவாரகா கல், விஷ்ணு சக்கரக் கல், பிரதீக் கல், நாராயணக் கல், திருவலச்சுழி கல் என்று வேறு பெயர்களிலும் சொல்வதுண்டு.
இந்தக் கோமதிச் சக்கரக் கல்லை வைத்து வணங்கினால், அயோத்தியா, மதுரா, ஹரித்துவார், காசி, காஞ்சிபுரம், அவந்திகா எனும் உஜ்ஜயினி, துவாரகை ஆகிய ஏழு தலங்களுக்குச் சென்று வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள் உடனடியாகக் கிடைக்கும் என்கின்றனர்.
துவாரகையில் இணையும் கோமதி நதியில் அஷ்டலட்சுமியும் சேர்ந்திருந்ததால் துவாரகை நகரமே அனைத்து வசதிகளையும் பெற்றிருந்தது என்பர். அஷ்டலட்சுமிக்கு இணையாகக் கிருஷ்ணனால் உருவாக்கப்பட்ட மேலான செல்வமே கோமதி சக்கரம் என்று புகழப்படுகிறது. இந்தக் கோமதிச் சக்கரத்தை வைத்து வழிபட்டதால்தான் துவாரகை மக்கள் மனமகிழ்ச்சியுடனும், அமைதியுடனும் வாழ்ந்தனர் என்று அப்பகுதி மக்கள் இன்றும் கருதுகின்றனர்.
கோமதிச் சக்கரக் கல்லை வைத்து வழிபடுபவர்கள் இறைவனின் அன்பைப் பெற்று முக்தி அடைகின்றனர்.
துவாரகைக்கு சங்கோதரா, ஸ்ரீ தீர்த்தா என்ற பெயர்களும் உண்டு. இங்கு ஸ்ரீ கிருஷ்ணர் ஆட்சி செய்த தர்மசபை உள்ளது. அவர் கோமதிக் கல் சுழியின் மீதமர்ந்தே ஆட்சி செய்ததாகவும் தொன்ம நம்பிக்கை உண்டு. மேலும், ஸ்வர்க துவாரம், மோட்ச துவாரம் என்ற இடத்தில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் இந்தக் கல்லை உருவாக்கியதாகவும் நம்பிக்கை இருக்கிறது. இந்தக் கோமதிச் சக்கரக் கல், சொர்க்கம் மற்றும் மோட்சம் இரண்டிற்கும் உதவுகிறது. விஷ்வகர்மாவால் உருவாக்கப்பட்ட துவாரகையில் கிருஷ்ணர் மக்கள் துன்பம் நீக்கிக் கொள்ளக் கோமதிச் சுழியைப் பதித்துக் கொடுத்துள்ளார் என்ற நம்பிக்கையும் உண்டு.
இதே போன்று, கோமதிச் சக்கரம் விநாயகப் பெருமானோடு தொடர்புடையதாகும். சுழி போட்டுச் செயல் எதையும் தொடங்கு என்று கூறுவார்கள். எச்செயலைச் செய்யத் தொடங்கும் முன்பும், பிள்ளையார் சுழி போட்டுச் செயல்களைச் செய்யத் தொடங்கினால் முடிவு லாபகரமாக அமையும் என்பர். பிள்ளையார் சுழிக்கு இன்னொரு பெயர்தான் கோமதித் திருவலச் சுழியாகும். இதன் உட்பொருள் சுபம், லாபம் என்பதாகும். இந்தச் சுழியை ஒருவர் கண்டாலே அவர் மூலாதாரத்தைத் தொட்டதாகவும், முதற்கடவுளை வணங்கியதாகவும் பொருளாகும். தொடக்கத்தில் எல்லாச் சுழிக்கும் முதல் சுழி கோமதி சுழியாகும். பிள்ளையாரின் துதிகைச் சுழியைப் பார்த்தால் வெற்றியாகும். அதே போல் கோமதி சுழியைப் பார்த்தாலே வெற்றியாகும் எனச் சொல்வோரும் உண்டு. சுதர்சனச் சக்கரத்திற்கு ஆதிசக்கரம் இந்தக் கோமதி சக்கரமாகும்.
வலம்புரிச் சங்கிலும் மேற்புறத்தில் திருவலச் சுழி இருக்கும். இதற்க்கிணையான இந்தக் கோமதி சக்கரத்தை வைத்து வழிபடும் போது வலம்புரி சங்கின் பலனும் சேர்ந்து கிடைத்துவிடும்.
கோமதி சுழி பசுவிடம் அதிகமாக நிறைந்துள்ளது. கண்களில், முதுகில், கால் குளம்பில், முதுகில், வால் மேல்பகுதியில், நெற்றியில், கழுத்தில், அடிவயிற்றில், குதத்தில் என பல சுழிகளை பசு மட்டுமே அதிகம் பெற்றிருக்கும். இது ஸ்ரீ ஹரியால் உருவாக்கப்பட்டது . அதனால் தான் பசுவிற்குத் தனி இடம் கொடுக்கப்படுகிறது. இந்தக் கோமதி சுழி கல் ஒட்டுமொத்த பலனும் ஸ்ரீ ஹரிஹரனால் முக்தி பெற்ற ஆத்மா மூலம் உற்பத்தி செய்யப்பட்டு இருக்கிறது. எனவே, பசுவை வணங்கினால் கிடைக்கும் அனைத்துப் பலன்களும் கோமதி சக்கரத்தாலும் கிடைக்கும்.
சாலி கிராமத்தை வைத்து வழிபடுவதை நாம் அறிவோம். அந்த சாலிகிராமத்தின் உள் ரகசியமே இந்தத் திருவலச் சுழிச் சக்கரம் தான். இதை வைத்து வழிபடும் போது பிரமிடு, மகாமேரு ஸ்ரீ சக்கரம் தனியாக வைத்து வழிபடுவதால் கிடைக்கும் பலனை கோமதிச் சக்கரம் ஒன்றிலேயேப் பெறலாம்.
கோமதிச் சக்கரம் பயன்படுத்துவது குறித்து மேலும் சில தகவல்கள் சொல்லப்படுகின்றன. அவை;
* வில்வம் ஆறு மாதம் வரைப் பலனளிக்கும். கோமதி சக்கரம் ஆண்டாண்டு காலமாகப் பலனளிக்கும். கோமதி சக்கரத்தை யார் தலையில் வைத்தும் ஆசிர்வாதம் செய்யலாம்.
* ஸ்ரீராமர் ஆஞ்சநேயர் மூலம் சீதாதேவிக்கு அடையாளம் காட்டக் கொடுத்தனுப்பிய ரகுவம்ச கணையாழி (மோதிரம்) இந்தக் கோமதிச் சக்கரம் பதித்ததுதான்.
* கோமதிச் சக்கர வழிபாட்டை இருக்கும் இடத்தில் இருந்து ஒருமுறை செய்தாலோ அல்லது நினைவு கூர்ந்தாலோ சகல பாவமும் விலகுகிறது.
* கோமதிச் சக்கரத்தை வைத்து வழிபட்டாலேப் போதும். காசிக்குச் செல்ல வேண்டிய கட்டாயமே இல்லை.
* கோமதி சக்கரம் வைத்திருந்தாலே நாகதோஷம் விலகிவிடும். பரிகாரத்துக்கு வேறு தலங்கள் எதற்கும் போக வேண்டியதில்லை.
* கோமதிச் சக்கரம் ஒரு உயிர்கல் வகையாகும். வளரக்கூடியதாகும். இது எல்லா அதிர்ஷ்டக் கற்களுக்கும் மேலானதாகும். இதன் சுழியை சற்று நேரம் உற்று பார்த்து கொண்டிருந்தாலே சில மாறுதல் மனத்திரையில் தெரியும்.
* மனித உடலிலும் பல்வேறு சுழிகளைக் காணமுடியும். சங்கிலும் சுழி, சக்கரத்திலும் சுழி, கைகளிலும் காலிலும் சுழி இருக்கும், உச்சி தலையிலும், முன் நெற்றியிலும் இந்தச் சுழி இருக்கும். உள்ளங்கை சந்திர மேட்டிலும், விரல்மேல் விரல் அங்குலாஸ்தியிலும், நம் தொப்புளிலும், மார்பு குழியிலும், தொண்டைக் குழியிலும், ஆசன வாயிலிலும், முதுகின் பின்புறமும், மச்சங்களிலும், கண் கருவிழியிலும், நடுநெற்றி கண்ணிலும் இந்தச் சுழி இருக்கும். உள்ளங்கையிலும், கை கால் முட்டியிலும் இந்தச் சுழி இருக்கும். மூக்கின் நுனி பகுதியிலும், உள் நாக்கிலும் இந்தச் சுழி இருக்கும். நம் காதுகளும் திருவலச் சுழிதான். நாம் சுவாசிக்கும் காற்றும் திருவல சுழியாகத்தான் இயங்குகிறது.
* வீசுகின்ற சுழல் காற்றானாலும், கடல் அலையானலும் கோமதி சுழியாகத்தான் சுற்றும். தெய்வத்தை மூன்றுமுறை சுற்றி வலம் வந்தால் அது கோமதி சுற்றாகும். அதுவே செல்வ வளம் தரும். கிரிவலமாக இருந்தாலும் தொடர்ந்து மூன்று பௌர்ணமி தலா ஒரு சுற்று வீதம் மூன்று பௌர்ணமி சுற்றினால்தான் கோமதி வல பலன் கிட்டும்.
*எலுமிச்சை கனி உட்பிரகாரமும், மரங்களின் உட்பிரகாரமும், பூமியின் உட்பிரகாரமும் கோமதி சுழி கொண்டதாகும். அசையும், ஆடும், சுற்றும் பொருளெல்லாம் பெரும்பாலும் வலது புறமாகவே சுற்றும். பூமி கூட கோமதிச் சுற்றாகவே உழல்கிறது. வலசுழி பொருள் எல்லாம் சுபமானது. சக்தி வாய்ந்தது என்பதால் தான் வலம்புரி சங்கு, வலம்புரி விநாயகர் என வலபக்க சக்தி அதிகமாக நேசிக்கப்படுகிறது.
* தமிழ் உயிர் எழுத்துக்களிலும் பிற மொழி எழுத்துக்களிலும் சுழியில்லாமல் இருக்காது. விலங்குகளின் உடலிலும், முகத்திலும், பாதங்களிலும் கோமதி வல சுழி உண்டு.
* கோள்கள் உழல்வதும் பிரிவதும் சேர்வதும் வலச்சுழியோடு தான். இடச்சுழியும் உண்டு. இது ஒரு சில கோள்களேயாகும் எனினும் வலச்சுழி இதிலிருந்து பாதுகாப்பு தரும்.
கோமதி எனும் விதிச்சுழியை நினைவில் பதிய வைத்தால் நினைவாற்றல் பெருகும். சுழியை நெற்றிக்கண்ணில் பதித்து வலது பக்க மூளையில் வேண்டுதலை பதிக்க விரைவில் நிறைவேறும்