குத்துவிளக்கின் ஒவ்வொரு பகுதியும் நமக்கு ஒவ்வொரு தெய்வத்தினை நினைக்கச் செய்கிறது.
அடிப்பாகம்
மலர்ந்த தாமரைப் பூப்போல அகன்று வட்டமாக இருப்பதால் தாமரை மலரின் மேல் வீற்றிருக்கும் பிரம்மதேவியைக் குறிக்கிறது.
தண்டுப்பாகம்
இது தூணைப்போன்று உயரமாக இருப்பதால் ஓங்கி வளர்ந்து பூமியை ஓரடியாலும், ஆகாயத்தை ஓரடியாலும் அளந்த நெடுமாலாகிய மஹாவிஷ்ணுவைக் குறிக்கின்றது.
அகல் விளக்கு
தண்டுக்கு மேலே அகல் போல் நெய் அல்லது எண்ணெய் ஊற்றப்பட்டுள்ள பாகம், சிவனார் கங்கையைச் சடையுள் வைத்திருப்பது போல் இருப்பதால் இப்பாகம் உருத்திரனைக் குறிக்கின்றது.
திரியிடும் கண்
திரி எரிவதற்குரிய 5 முகங்களும் மஹேஸ்வரனை(பஞ்சமுகன்) குறிக்கின்றது.(ஈசானம், வாமதேவம் சத்யோசதம், தத்புருஷம், அகோரம் என்பதாகும்)
மேல்தண்டு
அகலின் மேல் கும்ப கலசம் போல் உள்ள உச்சிபாகம் இருப்பதால் ரூபா ரூபத்திருமேனி உடைய சதாசிவனாய் கருதத்தக்கது.
எண்ணெய்
அகல் பாகம் முழுவதும் பரவியுள்ள நெய்யானது உருவமின்றி எங்கும் பரவி நிற்கும் நாதத் தத்துவத்தைக் குறிக்கின்றது.
திரி
இந்து சமயத் தத்துவத்தை அல்லது வெண்மை நிற ஒளியை விளக்குகிறது. (பிந்து)
சுடர்
தீப்பிழம்பு இலக்குமிதேவியின் வடிவமாகக் கருதப்படுகிறது (திருமகள்)
ஒளி
பிரகாசமாய் இருப்பதால் இது ஞானமயமான சரஸ்வதி தேவியின் வடித்தைக் குறிக்கின்றது.
வெப்பம்
எரிக்கும் சக்தியானது அழிக்கும் சக்தியாகிய ருத்திராணியின் வடிவமாகக் கருதப்படுகிறது.
பொதுவாக, திருவிளக்கு ஏற்றும் பெண்களுக்கு அன்பு, நிதானம், சமயோசிதம், மன உறுதி, சகிப்புத்தன்மை எனும் ஐந்து குணங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.