கோயில்களில் வழிபடச் செல்லும் பக்தர்கள் அனைத்துத் தெய்வங்களையும் வழிபட்டுவிட்டுக் கடைசியாக, நவகிரகங்கள் அனைத்தையும் ஒன்பது முறை வலமாக சுற்றி வழிபடுவதே சிறப்பு. எந்தவொரு கிரகத்தையும் கையால் தொட்டு வணங்கக் கூடாது என்பதும் தொன்ம நம்பிக்கை உள்ளது.
எந்தக் கிரகத்தை வழிபட்டால் என்ன பலன் கிடைக்கும்? என்று தெரிந்து கொள்ளலாம்.
1. சூரியன் - வாழ்வில் மங்களமும், ஆரோக்கியமும் கிடைக்கும்.
2. சந்திரன் - புகழ் கிடைக்கும்.
3. செவ்வாய் (அங்காரன்) - துணிவு அதிகரிக்கும்.
4. புதன் - நற்புத்தி கிடைக்கும், அறிவாற்றல் பெருகும்.
5. குரு (வியாழன்) - செல்வமும் புத்திர பாக்கியமும் கிடைக்கும்.
6. சுக்கிரன் - நல்ல மனைவி அமையும், வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும்.
7. சனி - ஆயுள் பலம்பெறும்.
8. ராகு - பயணத்தால் நன்மை கிடைக்கும்.
9. கேது - ஞானம் பெருகும்; மோட்சம் கிடைக்கும்; ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும்.
கிழமைக்கு ஏற்றவாறு அந்தந்தக் கிரகத்துக்கு உரிய கடவுளை வணங்கும் போது, மேலும் கூடுதல் பலன்கள் கிடைக்கும்.