சாஸ்தா என்றால் ஆளுபவன் என்று பொருள். ‘தர்மஸ்ய சாஸனம் கரோதி இதி தர்ம சாஸ்தா’ எனும் வடமொழி சுலோகத்திற்குத் தர்மத்தை நிலைநாட்டும் பகவானாக ஐயப்பன் இருப்பதால், அவரை தர்மசாஸ்தா என்று அழைக்கின்றனர். சாஸ்தாவுக்குச் செய்யப்படும் அபிசேக ஆராதனைகள் அளவற்ற பலன்களைக் கொடுக்க வல்லது. அவற்றில் சில அபிசேகங்களும் அதற்கான பலன்களும் கீழேக் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
* தைலம் - நோய் நீங்கும்.
* திரவியப்பொடி, மஞ்சள் பொடி, அரிசி மாவுப் பொடி, நெல்லிப்பொடி போன்ற அபிசேகப் பொடிகள் - கடன் நிவாரணம்.
* பஞ்சகவ்யம் - ஞானம்.
* பஞ்சாமிர்தம் - ஆயுள் விருத்தி.
* பசும்பால் - செல்வ வளம்.
* தயிர் - தேக புஷ்டி, உடல் நலம்.
* நெய் - நோயற்ற வாழ்வு.
* தேன் - இனிய குரல் வளம், நல்ல வாழ்க்கைத் துணை.
* கருப்பஞ்சாறு - வம்ச விருத்தி.
* பழச்சாறுகள் - தோற்றப்பொலிவு.
* இளநீர் - சத்புத்ர பேறு.
* சந்தனம் - தான்ய லாபம், உடல் நலம்.
* விபூதி - ஐஸ்வர்யம், முக்தி.
* புஷ்போதகம் - ராஜ பதவி.