ஈசன் 14 லோகங்களாக வியாபித்து உள்ளான் நமது கர்மவினைக்கு தகுந்து நமது ஆத்மா அந்த லோகங்களில் இன்ப துன்பங்களை அனுபவித்துச் செல்லும் .
நம் உடல் ஈசா ரூபம் என்பதால், நம் உடலில் அந்த லோகங்களுக்குரிய பகுதிகள்
1. அதலலோகம் - உள்ளங்கால்
2. விதலலோகம் - கணுக்கால்
3. சுதலலோகம் - முழங்கால்
4. நிதல லோகம் - முழங்காலுக்கு மேல்
5. ஊரு லோகம் - வலது மேல் தொடை
6. தராதலம் - இடது மேல் தொடை
7. ராசாதலம் - குய்யம்
8. பாதல லோகம் - இடை
9. பூலோகம் - நாபி (தொப்புல்)
10. சுவர்க்க லோகம் - இதயம்
11. மகா லோகம் - தோல்
12. ஜன லோகம் - முகம்
13. தவ லோகம் - நெற்றி
14. சத்ய லோகம் - சிரசு
சிவயோகத்தில் தாமே ஈசனாக மாறும் தவமுறையைக் கற்ற சித்தர்கள் உள்ளங்காலில் இருந்து தலை உச்சி வரை ( அதலம் லோகம் முதல் தவலோகம் வரை தவம் செய்து பின் சத்ய லோகம் புகுவர்) தவம் செய்து கர்ம வினைகள் அற்ற ஆன்மாவாய் தானே ஈசனாக மாறுவார்கள் . நீங்களும் இதைப் பின்பற்றித் தவ சக்தியால் சிவரூபம் ஆகலாம்.