உலகத்தின் ஆதிகுருவான காகபுஜண்டருக்குப் பதினாறு திருப்பெயர்கள் உண்டு. அவை;
1. காகபுஜண்டன் - காக்கையைக் கரத்தில் (புஜத்தில்) தாங்கியுள்ளதால் காகபுஜண்டர்
2. நாகபுஜண்டன் - நாகத்தைக் கரத்தில் தாங்கியுள்ளதால் நாகபுஜண்டன்
3. யோகபுஜண்டன் - யோகதண்டத்தை கரத்தில் (புஜத்தில்) தாங்கியுள்ளதால் யோகபுஜண்டன்
4. புஜங்கன் - கரங்களில் பல அங்கங்களைக் கொண்டுள்ளதால் புஜங்கன்
5. புஜண்டி - கரத்தை அண்டியவர்களுக்கெல்லாம் உபதேசித்தருள்வதால் புஜண்டி
6. காக்கையன் - பல கோடி ரூபங்களை எடுத்தாலும் அவருக்குப் பிடித்தமான ரூபமாக காக்கை ரூபமிருப்பதால் காக்கையன்
7. நாகேந்திரமுனி - நாகலோகத்தில் வாழும் நாகங்களுக்கெல்லாம் குருமுனிவராகத் திகழ்வதால் நாகேந்திரமுனி
8. மனுவாக்கியன் - உலகத்தின் உயர்ந்த நீதியாக விளங்கக்கூடிய மனுநீதியை உபதேசிப்பதால் மனுவாக்கியன்
9. காலாமிர்தன் - முக்கால ரகசியங்களையும் உணர்ந்து அதன் அமிர்தங்களை இவ்வுலகிற்கு உபதேசித்தால் காலாமிர்தன்
10. சஞ்சீவிமுனி - அழியாத சிரஞ்சீவியாக வாழ்ந்து வருவதால் சிரஞ்சீவிமுனி
11. அஞ்சனாமூர்த்தி - முக்காலத்தையும் பூரணமாக உணர்ந்து முக்கால அஞ்சனமாக விளங்குவதாலும், கரத்தில் அஞ்சனம் கொண்டிருப்பதாலும் அஞ்சனாமூர்த்தி
12. கற்பகவிருட்சன்- கற்பகவிருட்சத்தின் மீது அமர்ந்து நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே வரும் அளவற்ற ஞானத்தை உபதேசித்துக் கொண்டிருப்பதாலும், இவரிடம் ஞான உபதேசம் பெறுபவர்கள் கற்பகவிருட்சமாக எல்லா வளங்களையும் பெற்றுவிடுவதாலும் கற்பகவிருட்சன்
13. நற்பவி- உலகமெல்லாம் நன்மையே விளைய வேண்டும் என்கிற உயர் நோக்கம் கொண்டு இவ்வுலகை அருளாட்சி செய்து கொண்டிருப்பதால் நற்பவி
14. பிரம்மகுரு - பரபிரம்ம தத்துவமாக விளங்கும் பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவன் ஆகிய மும்மூர்த்திகளுக்கும் அருளுபதேசம் செய்வதால் பிரம்மகுரு
15. ஆதிசித்தர் - சித்தர்களுக்கெல்லாம் முதல் சித்தனாக இவ்வுலகில் தோன்றிய எல்லா சித்தர்களுக்கும் உபதேசம் செய்து கொண்டு அவர்களை அருளாட்சி செய்து கொண்டு வருவதால் ஆதிசித்தர்
16. திரிகாலஜெயர்- முக்காலங்களையும் வென்று பலகோடி ஆண்டுகளாய் வெற்றியோடு சிரஞ்சீவியாக இவ்வுலகில் அருளாட்சி செய்து கொண்டு வருவதால் எனக்கு திரிகாலஜெயர்