இராகு கால பூசை
உ. தாமரைச்செல்வி

* ஞாயிறுக்கிழமை, இராகு கால வேளையில் நவக்கிரகங்களில் சூரியனுக்கு வில்வம் மற்றும் பாரிஜாத மலர்கள் கொண்டு அர்ச்சனை செய்து வழிபட வேண்டும்.
* திங்கட்கிழமை, இராகு கால வேளையில் நவக்கிரகங்களில் சந்திரனுக்கு வெள்ளை அலரி மலர்கள் கொண்டு அர்ச்சனை செய்து வழிபட வேண்டும்.
* செவ்வாய்க்கிழமை, இராகு கால வேளையில் நவக்கிரகங்களில் அங்காரகன் எனப்படுகின்ற செவ்வாய் கிரகத்திற்கு செம்பருத்தி மற்றும் மலர்கள் கொண்டு அர்ச்சனை செய்து வழிபட வேண்டும்.
* புதன்கிழமை, இராகு கால வேளையில் நவக்கிரகங்களில் புதன் பகவானுக்குத் துளசி இலைகள் கொண்டு அர்ச்சனை செய்து வழிபட வேண்டும்.
* வியாழக்கிழமை, இராகு கால வேளையில் நவக்கிரகங்களில் குரு பகவானுக்குச் சாமந்தி மலர்கள் கொண்டு அர்ச்சனை செய்து வழிபட வேண்டும்.
6. வெள்ளிக்கிழமை, இராகு கால வேளையில் நவக்கிரகங்களில் சுக்கிர பகவானுக்கு வெள்ளை அரளி (அலரி அல்ல) மலர்கள் கொண்டு அர்ச்சனை செய்து வழிபட வேண்டும்.
7. சனிக்கிழமை, இராகு கால வேளையில் நவக்கிரகங்களில் சனி பகவானுக்கு சங்குபுஷ்ப மலர்கள் கொண்டு அர்ச்சனை செய்து வழிபட வேண்டும்.
வாரம் முழுவதும் இந்த ஏழு கிரகங்களுக்கும், ஏழு விதமான மலர்கள் கொண்டு, ஏழு நாட்களும் தொடர்ந்து பெண்கள் அர்ச்சனை செய்து வழிபட்டு வந்தால் அனைத்து வளங்களும் கிடைக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு, விரைவில் திருமணம் கை கூடி வரும். குழந்தை இல்லாதப் பெண்களுக்கு கூடிய விரைவில் மகப்பேறு கிடைக்கும். குடும்ப அமைதிக்காக வழிபாடு செய்தால், குடும்பத்தில் அமைதி நிலைக்கும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.