சிவத் திருவுருவங்கள்
சித்ரா பலவேசம்
சிவபெருமான் சத்யோ ஜாதம், வாமதேவம், அகோரம், தற்புருடம், ஈசானம் எனும் பெயர்களில் ஐம்பெரும் தொழில்களை செய்து வருவதாக சைவ வழிமுறையைக் கடைப்பிடிக்கும் இந்து சமயத்தினர் குறிப்பிடுகின்றனர்.
வ. எண். |
பெயர் |
தொழில் |
திசை |
வடிவம் |
நிறம் |
1. |
சத்யோ ஜாதம் |
படைத்தல் |
மேற்கு |
நிலம் |
பால் நிறம் |
2. |
வாமதேவம் |
காத்தல் |
வடக்கு |
நீர் |
சிகப்பு |
3. |
அகோரம் |
அழித்தல் |
தெற்கு |
நெருப்பு |
கருப்பு |
4. |
தற்புருடம் |
மறைத்தல் |
கிழக்கு |
காற்று |
மஞ்சள் குங்குமம் |
5. |
ஈசானம் |
அருளல் |
வடகிழக்கு |
ஆகாயம் |
படிகம் |
சிவனின் அடையாளங்கள்
சிவ பெருமானின் தனித்துவ அடையாளங்களாக கீழ்வரும் அடையாளங்கள் கொள்ளப்படுகின்றன.
நெற்றிக்கண் காணப்படல்.
கழுத்து நீலநிறமாக காணப்படல்.
சடைமுடியில் பிறைநிலாவைக் கொண்டிருத்தல்.
நீண்ட சுருண்ட சடாமுடி
தலையில் கங்கை நதி பாய்ந்து கொண்டிருத்தல்.
உடல் சாம்பல் நிறமாக இருத்தல்.
புலித் தோலினை ஆடையாக அணிந்திருத்தல்.
கழுத்தினைச் சுற்றி பாம்பு காணப்படல்.
கையினில் உடுக்கை,திரிசூலம் தாங்கியிருத்தல்.
நந்தியினை(காளை) வாகனமாகக் கொண்டிருத்தல்.
இடுகாட்டினை வாழ்விடமாக கொண்டிருப்பவர்
சக்தியைப் பாதியாக கொண்டிருத்தல்
சிவனின் திருஉருவங்கள்
சிவபெருமானின் திருஉருவங்கள் என கீழ்காணும் பெயர்களில் அழைக்கப்படுகின்றன.
சந்திரசேகரர்.
உமாமகேஸ்வரர்.
ரிஷபாரூடர்.
நடராஜர்.
கல்யாணசுந்தரர்.
பிட்சாடனர்.
காமதகனார்.
காலசம்ஹாரமூர்த்தி.
திரிபுராந்தகர்.
சலந்தரர்.
கஜாசுர சம்ஹாரர்.
தக்க்ஷ யக்ஞவதர்.
ஹரியர்த்தர்.
அர்த்தநாரீசுவரர்.
கிராதகர்.
கங்காளர்.
சண்டேச அநுக்கிரஹர்.
நீலகணடர்.
சக்ரப்ரதர்.
விக்னப்ரசாதர்.
சோமாஸ்கந்தர்.
ஏகபாதர்.
சுகாசனர்.
தட்சிணாமூர்த்தி.
லிங்கோத்பவர்.
ரிஷபாந்திகர்.
அகோரவீரபத்ரர்.
அகோராஸ்ரமூர்த்தி.
சக்ரதானஸ்வரூபர்.
சிவலிங்கம்.
முகலிங்கேஸ்வரர்.
சர்வஸம்ஹாரர்.
ஏகபாத திரிமூர்த்தி.
திரிபாதமூர்த்தி.
ஜ்வரஹரேஸ்வரர்.
ஊர்த்துவதாண்டவர்.
வராக் ஸம்காரி .
கூர்மஸம்ஹாரி.
மச்சஸம்ஹாரி.
சரபேசர்.
பைரவர்.
சார்த்துலஹரி.
லகுளீசர்.
சதாசிவர்.
உமேசர்.
புஜங்கலளிதர்.
புஜங்கத்ராசர்.
கங்காதரர்.
கங்காவிசர்ஜனர்.
யக்ஞேஸ்வரர்.
உக்ரர்.
ஆபதோத்தாரணார்.
ஷேத்ரபாலர்.
கஜாந்திகர்.
அச்வாரூடர்.
கௌரீவரப்ரதர்.
கௌரீலீலா சமன்விதர்.
கருடாந்திகர்.
பிரம்ம சிரச்சேதர்.
ரக்தபிக்க்ஷா ப்ரதானர்.
சிஷ்யபாலர்.
ஹரிவிரிஞ்சதாரணர்.
சந்தியா நிருத்தர்.
*****
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.