குரங்கு நம்மிடமுள்ளதை பிடுங்கிக் கொள்ளும் குணமுடையது. அதையே தெய்வமாகப் பார்த்தால், ஆஞ்சநேயனாய் மாறி அருளை வாரி இறைக்கிறது. யானை நம்மை விரட்டினால் அலறியடித்து ஓடுகிறோம். ஆனால் கணேசா என்னைக் காப்பாற்று என வாய் நம்மையறியாமலே ஆனைமுகனை நினைக்கிறது. இதன் பொருள் என்ன?
மிருகம் தனக்குரிய இயற்கையான குணத்தை ஆண்டவனின் கட்டளைப்படி கடைபிடிக்கிறது. ஆனால் மனிதன் தனக்குரிய நிலையில் இருந்து மாறி மிருகக் குணத்துடன் அலைகிறான். அவன் மிருக நிலையில் இருந்து, தெய்வ நிலைக்கு உயர வேண்டும். அதனால் தான், மனதில் வாழும் எண்ணங்களை மிருகங்களாக உருவகப்படுத்தி அவற்றை அடக்க வேண்டும் என்ற அடிப்படையில் நமது தெய்வங்கள் அதன் மீது அமர்ந்துள்ளனர்.
மொத்தத்தில், மிருகங்கள் தங்கள் இனத்தைப் பெருக்க வரையறை வைத்துக் கொள்வதில்லை. தன்னைச் சார்ந்த எல்லா மிருகங்களுடனும் உறவு கொள்ளும். பகுத்தறிவுள்ள மனிதன் அப்படி இருக்கக்கூடாது. தனக்கென ஒருவன் அல்லது ஒருத்தியை தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். மிருகக் குணத்தை விட்டொழிக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தும் விதமாகத்தான் இறைவனுக்கு வாகனங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன.
இந்து சமயக் கடவுள்களுக்கு வெவ்வேறு வாகனங்கள் இருக்கின்றன. அவை;
* விநாயகர் - மூஞ்சுறு
* முருகன் - மயில்
* சிவபெருமான் - நந்தி
* விஷ்ணு - கருடன்
* பைரவர் - நாய்
* அய்யப்பன் - புலி
* லட்சுமி - செந்தாமரை, ஆந்தை
* சரஸ்வதி - வெண் தாமரை, அன்னம்
* பிரம்மா - அன்னம்
* சண்டி தேவி - பன்றி
* துர்க்கை - கலைமான்
* இந்திரன் - ஐராவதம் யானை
* காமதேனு - பசு
* குபேரன் - கீரி
* அக்னி - ஆடு
* காமதேவன் - கிளி
* முதலை - வருணன்
* பூனை - சஷ்டிதேவி
* கழுதை - ஜேஷ்டா
* மனிதன் - நிருதி
* எமதருமன் - எருமை
நவக்கிரக வாகனங்கள்
* சூரியன் - ஏழு குதிரைகள் பூட்டிய ரதம்
* சந்திரன் - மான்கள் பூட்டிய ரதம்
* செவ்வாய் - ஆட்டுக் கிடா
* புதன் - குதிரை
* வியாழன் - யானை
* சுக்ரன் - முதலை
* சனி - காகம்
* ராகு - சிங்கம், புலி
* கேது - மீன்