* மலேசிய வாழ் இந்துக்களின் அடையாளச் சின்னமாக பத்துமலைத் திருத்தலம் திகழ்கின்றது.
* இத்திருத்தலத்தின் முன்பு அமைந்துள்ள முருகப்பெருமான் திருவுருவம், உலகிலேயே மிக உயரமானது. இதன் உயரம் 42.7 மீட்டர் (140அடி).
* தமிழ்நாடு, திருவாரூரைச் சேர்ந்த சிற்பி ஆர். தியாகராஜன் என்பவர் தலைமையில் முருகன் திருவுருவம் உருவாக்கம் செய்யப்பெற்றது. அவருக்கு உதவியாக 14 சிற்பிகள் பணி புரிந்தனர்.
* பத்துமலை திருக்கோயில் சுண்ணாம்புக் குன்றுகளில் இயற்கையாக அமைந்த குகைகளில் அமைந்துள்ளது.
* பத்துமலையின் சிகரத்தில் இருக்கும் முருகப் பெருமானின் சன்னிதானத்தை அடைய 272 படிகளை ஏறிச் செல்ல வேண்டும்.
* கே.தம்புசாமி எனும் செல்வந்தரால் 1891ஆம் ஆண்டு முருகப்பெருமானின் திருவருளால் இந்தப் பத்துமலைக் கோயில் எழுப்பப்பட்டது.
* அதன் பின்பு, 1892-இல் இருந்து பத்துமலையில் தைப்பூசம் கொண்டாடப்பட்டு வருகிறது.
* பத்துமலையின் அடிவாரத்தில் கலைக்கூட குகை, அருங்காட்சியகக் குகையென இரு குகைக்கோயில்கள் உள்ளன. இந்தக் குகை மையங்கள் 2008 ஆம் ஆண்டு புதுப்பிக்கப்பட்டன.
* பத்துமலையின் இடது புறத்தில் இராமாயண குகை உள்ளது. இந்த இராமாயணக் குகைக்குச் செல்லும் வழியில் 50 அடி உயரம் உள்ள ஓர் அனுமார் திருவுருவத்தைக் காண முடியும்.
* பத்துமலை முருகப்பெருமான் திருவுருவம் மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.
* தைப்பூசத் திருநாளன்று பத்துமலையில் ஏராளமான பக்தர்கள் திரள்வர். ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசத் திருவிழாவில் 10 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.