* அடியும் முடியும் காணா முடியாதவராக சிவன் அருளும் கோயில் - திருவண்ணாமலை.
* அப்பர் கயிலைக்காட்சி கண்டு அம்மையப்பரை பாடிய தலம் - திருவையாறு.
* அப்புத்தலம் (நீர் தலம்) என்று போற்றப்படும் சிவாலயம் - திருவானைக்காவல்.
* அம்பிகை மயில் வடிவில் சிவனை பூஜித்த தலம் - மயிலாப்பூர் கபாலீஸ்வரர்.
* ஆதிசங்கரர் நிறுவிய முக்தி லிங்கம் உள்ள இடம் - கேதார்நாத்.
* ஆதிசங்கரருக்கு சிவன் அளித்த லிங்கம் உள்ள தலம் - சிருங்கேரி (சந்திரமவுலீஸ்வரர்).
* இறைவன் இறைவிக்கு இடபாகம் அளித்தத் தலம் - திருவண்ணாமலை.
* கருவறையில் சடைமுடியோடு காட்சிதரும் சிவலிங்கக் கோயில்கள் - திருவையாறு ஐயாறப்பர், சிவசைலம் சிவசைலநாதர் கோயில் (திருநெல்வேலி மாவட்டம்).
* காலனை உதைத்த காலசம்ஹார மூர்த்தியாக ஈசன் அருளும் தலம் - திருக்கடையூர்.
* காளியோடு சேர்ந்து சிவன் திருநடனம் ஆடிய தலம் - திருவாலங்காடு நடராஜர் கோயில் (கடலூர்).
* சிவன் நெருப்பாக வளர்ந்து நின்ற தலம் - திருவண்ணாமலை.
* சிவபெருமானை ஆடு பூஜித்த தலம் - திருவாடானை (ராமநாதபுரம் மாவட்டம்).
* ஞானசம்பந்தரைக் காண சிவன் நந்தியை விலகச் சொன்ன தலம் - பட்டீஸ்வரம்.
* சுக்கிரதோஷ நிவர்த்திக்குரிய சிவத்தலம் - கஞ்சனூர்.
* தரிசிக்க முக்தி என்ற சிறப்பைப் பெற்ற தலம் - சிதம்பரம்.
* அம்பிகையே உச்சிக்கால பூஜை செய்யும் தலம் - திருவானைக்காவல் (திருச்சி) ஜம்புகேஸ்வரர் கோயில்.
* அர்ச்சகர் அம்பிகையாக சிவனை பூஜிக்கும் தலம் - திருவானைக்காவல்.
* அருணகிரிநாதர் கிளிவடிவில் முக்தி பெற்ற இடம் - திருவண்ணாமலை (கிளி கோபுரம்).
* அறுபத்துமூவர் விழாவிற்கு பெயர் பெற்ற சிவத்தலம் - மயிலாப்பூர் கபாலீஸ்வரர்.
* அன்பின் சொரூபமாக அம்பிகை விளங்கும் தலம் - திருவாடானை( அன்பாயியம்மை அல்லது சிநேகவல்லி).
* அன்னத்தின் பெயரோடு சேர்த்து வழங்கப்படும் தலம் - திருச்சோற்றுத்துறை ( திருவையாறு அருகில் உள்ளது).
* ஆன்மாவைக் குறிக்கும் சிவன் இருக்கும் தலம் - திருப்பெருந்துறை (ஆவுடையார்கோயில்).
* இடக்காலில் முயலகனை ஊன்றிய கோலம் கொண்ட தலம் - வெள்ளியம்பலம் (மதுரை)