சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்யப் பயன்படுத்தும் பொருட்களுக்கேற்ப, அதற்கான பலன்கள் கிடைக்கும் என்கிற தொன்ம நம்பிக்கை உண்டு.
1. கந்தத்தைலம் – இன்பம்
2. மாப்பொடி – கடன் நீக்கம்
3. மஞ்சள் பொடி – அரச வசியம்
4. நெல்லிப் பருப்புப்பொடி – பிணி நீக்கம்
5. திருமஞ்சனத்திரவியம் – பிணி நீக்கம்
6. ரசப் பஞ்சாமிர்தம் – முக்தி
7. பழப் பஞ்சாமிர்தம் – முக்தி
8. பால் – ஆயுள் விருத்தி
9. பஞ்சகவ்யம் – சுத்தம், சகல பாவநீக்கம்
10. இளவெந்நீர் – முக்தி
11. தேன் – சுகம், சங்கீதக் குரல்வளம்
12. இளநீர் – ராஜயோகம் கிடைக்கும்
13. சர்க்கரைச்சாறு – பகைவரை அழிக்கும்
14. கரும்புச்சாறு – ஆரோக்கியம்
15. தமரத்தம் பழச்சாறு – மகிழ்ச்சி தரும்
16. எலுமிச்சம் பழச்சாறு – எமபயம் போக்கும்
17. நார்த்தம் பழச்சாறு – மந்திர சித்தி
18. கொழுச்சிப் பழச்சாறு – சோகம் போக்கும்
19. மாதுளம் பழச்சாறு – பகைமை அகற்றும்
20. அன்னாபிஷேகம் – விளைநிலங்கள் நல் விளைச்சல் தரும்
21. வில்வம் கலந்த நீர் (வில்வோதகம்) – மகப்பேறு தரும்
22. தர்ப்பைப்புல் கலந்தநீர் (குரோதகம்) – ஞானம் தரும்
23. பன்னீர் – குளிர்ச்சி தரும்
24. விபூதி (திருநீறு) – சகல ஐஸ்வர்யம் தரும்
25. தங்கம் கலந்த நீர் (ஸ்வர்ணோதகம்) – சகல சௌபாக்கியம் கிட்டும்
26. ரத்னம் கலந்த நீர் (ரத்னோதகம்) – சகல சௌபாக்கியம் கிட்டும்
27. சந்தனம் – அரசாட்சி, பெரும்செல்வம் கிட்டும்
28. கோரோசணை – சகல ஆரோக்கியம், மிக்க புகழ் கிட்டும்
29. ஜவ்வாது – சகல ஆரோக்கியம், மிக்க புகழ் கிட்டும்
30. புனுகு – சகல ஆரோக்கியம், மிக்க புகழ் கிட்டும்
31. பச்சைக் கற்பூரம் – சகல ஆரோக்கியம், மிக்க புகழ் கிட்டும்
32. குங்குமப்பூ – சகல ஆரோக்கியம், மிக்க புகழ் கிட்டும்
33. தயிர் – குழந்தைச் செல்வம் கிட்டும்
34. சங்காபிஷேகம் – சகல பாரிஷ்டம் கிட்டும்
35. ஸ்நபன கும்பாபிஷேகம் – சித்த சுத்தியடைந்து சிவதரிசனம் கிட்டும்