சிறப்புக்குரிய சிவ மந்திரங்கள்
மு. சு. முத்துக்கமலம்
சிவபெருமான் வழிபாட்டிற்காகப் பயன்படுத்தப்படும் பல மந்திரங்களில் ஐந்து மந்திரங்கள் சிறப்புக்குரியதாக இருக்கின்றன. அவை;
பஞ்சாக்ஷர சிவந்திரம்
"ஓம் நமசிவாய"
சிவபெருமானைப் போற்றுவதில் இந்த மந்திரம் அனைவராலும் அறியப்பட்டது. “நான் சிவபெருமானை வழிபடுகிறேன்” என்பது இதன் பொருளாகும். இந்த மந்திரத்தைத் தினமும் 108 முறை உச்சரிப்பதால் உங்கள் உடல் புனிதமடைகிறது. உங்களுக்குச் சிவபெருமானின் அருள் கிடைக்கிறது.
ருத்ர மந்திரம்
“ஓம் நமோ பகவதே ருத்ரே”
இது ருத்ர மந்திரமாகும். இறைவன் சிவபெருமானின் ஆசிகளைப் பெற இந்த மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். இது விருப்பத்தின் நிறைவேற்றத்திற்குப் பயனுள்ளதாக இருக்கிறது.
சிவ காயத்ரி மந்திரம்
“ஓம் தத்புருஷாய வித்மஹே
மஹாதேவாய தீமஹி
தன்னோ ருத்ரஹ் ப்ரசோதயாத்”
இந்து மதத்தில், காயத்திரி மந்திரம் மிகவும் சக்தி வாய்ந்த ஒரு மந்திரமாகும். சிவகாயத்திரி மந்திரமும் மிகவும் சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது. மன அமைதிக்காகவும் இறைவன் அருளைப் பெறவும் தினமும் இந்த மந்திரத்தை உச்சரியுங்கள்.
சிவா தியான மந்திரம்
“கர சரண க்ருதம் வாக் காயஜம் கர்மஜம் வா
ஸ்ரவண நயனஜம் வா மானஸம் வ அபராதம்
விஹிதம் அவிஹிதம் வா ஸ்ர்வமேதத்
க்ஷமஸ்வ ஜய ஜய கருணாப்தே ஸ்ரீ மஹாதேவ ஷம்போ”
நாம் செய்த எல்லாப் பாவத்தில் இருந்தும் நம்மை விடுவிக்கக் கோரி இறைவனிடம் கேட்பது இந்த மந்திரத்தின் பொருளாகும்.
மஹா ம்ருத்யுஞ்சய மந்திரம்
“ஓம் த்ரயம்பகம் யஜாமஹே ஸுகந்திம் புஷ்டிவர்த்தனம்
உர்வாருகமிவ பந்தனான் ம்ருத்யோர் முக்ஷீய”
அழிக்கும் கடவுளாக சிவபெருமான் இருப்பதால் மனிதனின் இறப்பு குறித்தப் பயத்தைப் போக்கவும் அவரே உரியவர். ஆகவே மகா மிருத்யுஞ்சய் மந்திரம் இந்த பலனை நமக்குத் தருகிறது.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.