வீடுகள், வணிக இடங்கள், கல்வி நிறுவனங்கள், அலுவலகங்கள் போன்ற இடங்களில் இறைவனை நினைத்துத் தூபமிட்டால், அவ்விடத்தில் அமைதியும் நற்சூழலும் அமையும் என்று பொதுவாகச் சொல்லப்படுகிறது. இருப்பினும், தூபத்திற்குப் பயன்படுத்தும் பொருட்களுக்கேற்ப அதன் பலன்களும் மாறுபடுகிறது. அவற்றுள் சில இங்கே...
* சந்தனம் - தெய்வ அருள் கிடைக்கும்.
* சாம்பிராணி - கண் திருஷ்டி பொறாமை நீங்கி முன்னேற்றம் ஏற்படும்.
* ஜவ்வாது - திடீர் அதிர்ஷ்டம் ஏற்படும்.
*அகிலி - குழந்தைப்பேறு கிடைக்கும்.
* துகிலி - குழந்தைகளுக்கு நீண்ட ஆயுள், அழகு ஆரோக்கியம் கிடைக்கும்.
*துளசி - காரியத்தடை, திருமணத்தடை, நீங்கி விரைவில் அவை நடந்தேறும்.
* தூதுவளை - வீட்டில் தெய்வங்கள் அருள் கிட்டும்.
* வலம்புரிக்காய் - பன்னிரண்டு வகையான பூத கணங்களும் நீங்கும்.
* வெள்ளைக் குங்கிலியம் - துஷ்ட ஆவிகள் அகலும்.
* வெண்கடுகு - பகைமை எதிர்ப்புகள் விலகும்.
* நாய்க்கடுகு - துரோகிகள் மறைவர்.
* மருதாணி விதை - சூனியக் கோளாறுகள் நீங்கும்.
* கரிசலாங்கன்னி - மகான்கள்அருள் கிட்டும்.
* வேப்பம்பட்டை - ஏவல், பீடை நீங்கும்.
* நன்னாரி வேர் - இராஜ வசியம் உண்டாகும்.
* வெட்டிவேர் - அனைத்து செயல்களும் வெற்றியாகும்.
* வேப்பிலைத் தூள் - அனைத்து நோய்களும் நீங்கும்.
* மருதாணி இலைத்தூள் - இலட்சுமி அருள் கிடைக்கும்.
* அருகம்புல் - அனைத்துத் தோஷங்களும் நீங்கும்.