சைவ சமயத்தில் “பஞ்சபூதத் தலங்கள்” என்று சிறப்பித்து ஐந்து தலங்களைச் சொல்வது போல, வைணவ சமயத்தில் 8 தலங்களை “ஸ்வயம் வ்யிக்த க்ஷேத்திரங்கள்” என்று சிறப்பித்துக் கூறுவார்கள். அவை;
1. பத்ரிகாச்ரமம்
இறைவன் தப்தரூபியாக (வெப்ப நிலையில்) உள்ள இமயமலைச் சாரலிலே அலகநந்தா நதியின் வடகரையில் உள்ள இக்கோயிலின் எதிரேயுள்ள வெந்நீர் ஊற்றுதான் இறைவனின் வடிவமாகக் கருதப்படுகிறது.
2. நைமிசாரண்யம்
இறைவன் அரண்ய ரூபம் (காடு வடிவில்) உள்ளதாகக் கருதப்படுகிறது. இது உத்திரப் பிரதேசத்திலுள்ளது.
3. புஷ்கரம்
இறைவன் தீர்த்தரூபியாக (நீர் வடிவில்) கோயில் கொண்டுள்ளார். ஆஜ்மீர் அருகில் உள்ளது.
4. திருவேங்கடம் (திருப்பதி)
இறைவன் சேஷரூபமாக (மலை வடிவில்) இருக்குமிடம். ஆந்திரப் பிரதேசத்தில் உள்ளது.
5. ஸ்ரீமுஷ்ணம்
இறைவன் வாயு ரூபமாக (காற்று நிலையில்) இருக்குமிடம். தமிழ்நாட்டில் சிதம்பரம் அருகே உள்ளது.
6. திருவரங்கம்
இறைவன் பிரணவ ரூபமாக இருக்குமிடம். தமிழ்நாட்டில் திருச்சி மாநகரிலுள்ளது.
7. வானமாமலை
இறைவன் தைல ரூபமாக (எண்ணெய் நிலையில்) இருக்குமிடம். (இங்கு மூர்த்திக்கு நல்லெண்ணெய் அபிசேகம் செய்யப்படுகிறது)
8. முக்திநாராயணன்
இறைவன் சீதளரூபியாக (பனிநீர் நிலையில்) இருக்குமிடம். நேபாளத் தலைநகர் காத்மண்டு அருகில் உள்ளது.