மஹா மிருத்யுஞ்ஜய மந்திரம், பிரம்மிருஷி வஷிஷ்ட மைத்ரவரூணி வழங்கிய ரிக் வேதத்தின் 7வது மண்டலத்திலிருந்து வந்தது.
நோய் தாக்கியவர்கள் மற்றும் உடல் நலன் குறைபாடுகள் உள்ளவர்கள் இந்த மந்திரத்தைத் தொடர்ந்து தினமும் சொல்லி வந்தால் விரைவில் நோய் குணமாகும் என்பது நம்பிக்கை. ரிக் வேதத்திலும், யஜூர் வேதத்திலும் குறிப்பிடப்பட்டுள்ள இந்த மகா மிருத்யுஞ்ஜய மந்திரத்தைத் தினமும் 108 முறை ஜெபிப்பதன் மூலம் மரண பயம் நீங்கி ஆயுள் அதிகரிக்கும். இறை வழிபாட்டில் நாட்டம் ஏற்படும். தீராத நோயும் தீரும் என்ற நம்பிக்கை உள்ளது.
“ஓம் த்ரயம்பகம் யஜாமஹே ஸுகந்திம் புஷ்டிவர்த்தனம்
உர்வாருகமிவ பந்தனான் ம்ருத்யோர் முக்ஷீய மாம்ருதாத்…”
மேற்காணும் பாடலின் பொருள்:
”மந்திரத்தின் பொருள் நறுமணம் கமழும் மேனியனே, மூன்று கண்களை உடையவனே, அனைவரையும் பேணி வளர்ப்பவனே, உனை நாங்கள் வணங்குகிறோம். பழம் கனிந்து கிளையின் பிணைப்பிலிருந்து விடுதலையாகி உதிர்வதைப் போல, மரணத்திலிருந்தும், நிலையற்ற தன்மையிலிருந்தும் எங்களுக்கு விடுதலை தருவாயாக”