திருகோஷ்டியூர் நம்பி உபதேசித்த ஆறு விரோதிகள்
ஆஸ்ரயண விரோதி
எம்பெருமானை அடைய விடாமல் தடுப்பன அகங்காரம், மமகாரம், பேற்றில் ஐயம், பிராட்டி மற்றும் ஆசார்யானிடத்தில் அபசாரப்படுத்தல்.
ச்ரவண விரோதி
தன்னை மறந்து செவிசாய்த்து பிற விஷயங்களைக் கேட்டல். அதாவது, பிற தெய்வங்களைப் பற்றிக் கேட்பதில் உள்ள ஈடுபாடு சுவாமியைப் பற்றிக் கேட்பதைத் தடுக்கும்.
அனுபவ விரோதி
இதற்கு நுகர்ச்சி விரோதி என்று சொல்லப்படுகிறது, அதாவது, மலர், சந்தனம், சிற்றின்பம் முதலியன பகவத் அனுபவத்தைக் கெடுக்கும்.
ஸ்வரூப விரோதி
இயல்புக்கு விரோதி என்று பொருள், இறைவனுக்கு உரியன் நாம் என்பதை மறக்கச் செய்யும்.
பரத்வ விரோதி
பிரம்மா, ருத்ரன் முதலானவர்களை இறைவனாக எண்ணுதல்.
ப்ராப்தி விரோதி
இது பேறு பற்றிய விரோதியாகும். கைவல்யம் போன்ற பலனை விரும்புதல் எம்பெருமானை அடைய விடாமல் தடுக்கும்.