ம்ருத்யுஞ்சய மந்திரம்
மு. சு. முத்துக்கமலம்
சிலருக்கு மரண பயம் அவ்வப்போது வருவதுண்டு. அப்படி வரும் மரண பயத்தைப் போக்குவதற்கென்று ஒரு மந்திரம் இருக்கிறது.
ம்ருத்யுஞ்சய மந்திரம் எனும் அம்மந்திரத்தைத் தினசரி சொல்வதன், ஜபிப்பதன் மூலமாக மரண பயத்தை வெல்லலாம்.
“ஓம் ம்ருத்யுஞ்ஜயாய ருத்ராய
நீலகண்டாய சம்பவே
அம்ருதேசாய சர்வாய
மகாதேவாதே நமக”
இம்மந்திரத்தின் பொருள்:
மரணத்தை வென்றவரே! ருத்ரனே! விஷத்தை உண்டும், மரணத்தை அண்டவிடாதவரே, அம்ருதத்தை உடையவரே! சர்வமும் ஆனவரே! மகாதேவனே உன்னை வணங்குகிறேன்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.