நவகிரகங்களை வழிபடுவது நல்லது என்றாலும், எந்த ஒரு கோயிலுக்குச் சென்றாலும் மூலவரை வழிபடாமல் வெறும் நவகிரக வழிபாட்டை மட்டும் மேற்கொள்வது தவறானது. நவக்கிரகங்களின் நாயகனாக விளங்குபவர் சூரியன். இருகரங்களில் தாமரை ஏந்தி, வலம் புறம் உஷா, இடது புறம் பிரத்யுஷா என இரு மனைவியருடன் ஏழு குதிரை பூட்டிய ரதத்தில் கம்பீரமாய் வலம் வருபவர். நவக்கிரகங்களில் இவரைத்தான் முதலில் வழிபட வேண்டும். நவக்கிரகங்கள் ஒவ்வொன்றுக்கும் சுற்றுக்களும் வேறுபடுகின்றன. அவை;
1. சூரியன் – 10 சுற்றுகள்
2. சுக்கிரன் – 6 சுற்றுகள்
3. சந்திரன் – 11 சுற்றுகள்
4. சனி – 8 சுற்றுகள்
5. செவ்வாய் – 9 சுற்றுகள்
6. ராகு – 4 சுற்றுகள் அடிப்பிரதட்சிணம்
7. புதன் – 5, 12, 23 சுற்றுகள்
8. கேது – 9 சுற்றுகள்
9. வியாழன் – 3, 12, 21 சுற்றுகள்
இந்த நவக்கிரகங்களை மேற்காணும் எண்ணிக்கையில் சுற்றி வந்து வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள் இவைதான்;
1. சூரியன் – ஆரோக்கியம்
2. சந்திரன் – புகழ்
3. செவ்வாய் – செல்வச் செழிப்பு
4. புதன் – அறிவு வளர்ச்சி
5. வியாழன் – மதிப்பு
6. சுக்கிரன் – வசீகரத் தன்மை
7. சனீஸ்வரன் – மகிழ்வான வாழ்க்கை
8. ராகு – துணிவு
9. கேது – பாரம்பரியப் பெருமை