1. வரலட்சுமி விரதம் இருக்கும் பெண்களுக்கு மாங்கல்யப் பலம் நீடிப்பதோடு செல்வம், தைரியம், வெற்றி, அரசு பதவி, குழந்தைப்பேறு, கல்வி உள்ளிட்ட எல்லா வளங்களும் வந்து சேரும்.
2. வரலட்சுமி தினத்தன்று அன்னம், பருப்பு, வடை, பாயசம், கொழுக்கட்டை, அப்பம், இட்லி முதலியவற்றுடன் பழவகைகளை நைவேத்தியம் செய்ய வேண்டும்.
3. வரலட்சுமி பூஜைக்கு பயன்படுத்தும் கும்பம் எதிர்பாராத விதமாக நெளிந்து விட்டாலோ, சேதம் அடைந்து விட்டாலோ, வீட்டில் வைத்துக் கொள்ளக்கூடாது. தானமாகக் கொடுத்து விட வேண்டும்.
4. வரலட்சுமி பூஜையின் போது, சந்தனத்தில் லட்சுமி செய்து வழிபடலாம். ஆனால், மறுநாள் அதை நீர் நிலைகளில் கரைத்து விட வேண்டும்.
5. வரலட்சுமி தினத்தன்று புண்ணிய நதிகளில் நீராடலாம்.
6. சித்ரநேமி என்ற கணதேவதை வரலட்சுமி விரதத்தை அனுஷ்டித்து தன்னுடைய குஷ்ட ரோகம் நீங்கப் பெற்றாள்.
7. பார்வதிதேவி ஸத்புத்திர லாபத்திற்காக வரலட்சுமி விரதத்தை அனுஷ்டித்து சண்முகனைப் பெற்றாள்.
8. விக்ரமாதித்தன் இந்த விரதத்தை அனுஷ்டித்து இழந்த ராஜ்ஜியத்தை திரும்பப் பெற்றான்.
9. நந்தன் இந்த விரதத்தைக் கடைப்பிடித்து அழகிய மனைவியை அடைந்தான்.
10. லட்சுமி, வழிபாட்டின் போது மறக்காமல் அஷ்டலட்சுமி ஸ்தோத்திரம் சொல்வது மிகவும் நல்லது.