நாம் செய்யும் சில நற்செயல் நமக்கு மட்டுமில்லாது, நம் தலைமுறைக்கும் பல்வேறு நற்பேறுகளை வழங்கும் என்று இந்து சமயம் குறிப்பிடுகிறது. அது குறித்த தகவல்கள்:
* பட்டினியால் வருந்தும் ஏழைகளுக்கு உணவளித்தல் - 3 தலைமுறை
* புண்ணிய நதிகளில் நீராடுதல் – 3 தலைமுறை
* திருக்கோயிலில் தீபம் ஏற்றுதல் – 5 தலைமுறை
* அன்னதானம் செய்தல் – 5 தலைமுறை
* ஏழைப்பெண்ணுக்கு திருமணம் செய்வித்தல் – 5 தலைமுறை
* முன்னோர் சடங்குகளுக்கு உதவி செய்தல் – 6 தலைமுறை
* திருக்கோயில் சீரமைப்பு – 7 தலைமுறை
* அனாதையாக இறந்தவர்களுக்கு இறுதிச்சடங்குகள் செய்தல் – 9 தலைமுறை
* பசு உயிரைக் காப்பாற்றுதல் – 14 தலைமுறை
* முன்னோர்களுக்கு கயா தலத்தில் பிண்டம் அளித்து திதி பூசை செய்தல் – 21 தலைமுறை
நமக்கு மட்டுமின்றி, நமக்குப் பின் வரும் நம் மரபினருக்கும் நற்பேறுகள் கிடைக்க, நம்மால் முடிந்த வரை நல்ல செயல்களைச் செய்வோம்.