தேவாரம் எனப்படுவது முதல் ஏழு திருமுறைகளைக் கொண்டது. இவற்றில் 1, 2, 3 திருமுறைகள் திருஞான சம்பந்தராலும், 4 , 5, 6 ஆகிய திருமுறைகள் திருநாவுக்கரசராலும், 7ஆம் திருமுறை சுந்தரராலும் அருளப்பெற்றவை. இத்திருமுறைகளில் பாடப்பட்ட பண் தேவாரப்பண் எனப்படுகிறது. இப்பண்களின் பழைய பெயர்களும், அதன் தற்போதையப் பெயர்களும் கீழேப் பட்டியலிடப்பட்டிருக்கின்றன.
1. செவ்வழி - யதுகுலகாம்போதி
2. தக்கராகம் - காம்போதி
3. புற நீர்மை - பூபாளம்
4. பஞ்சமம் - ஆகிரி
5. நட்ட பாடை - நாட்டை
6. ஆந்தாளிக்குறிஞ்சி - சாமா
7. காந்தாரம் - நவரோஸ்
8. பழம்பஞ்சுரம் - சங்கராபரணம்
9. மேகராகக் குறிஞ்சி - நீலாம்பரி
10. கொல்லிக்கௌவானம் - நவரோஸ்
11. பழந்தக்கராகம் - ஆரபி
12. குறிஞ்சி - குறிஞ்சி
13. நட்டராகம் - பந்துவராளி
14. வியாழக்குறிஞ்சி - சௌராஷ்டிரம்
15. செந்துருத்தி - மத்யாவதி
16. தக்கேசி - காம்போதி
17. கொல்லி - நவரோஸ்
18. இந்தளம் - நாதநாமக்கிரியை
19. காந்தாரபஞ்சமம் - கேதாரகௌளம்
20. கெளிசிகம் - பைரவி
21. பியந்தைக்காந்தாரம் - நவரோஸ்
22. சீகாமரம் - நாதநாமக்கிரியை
23. சாதாரி - பந்துவராளி
24. திருக்குறுந்தொகை - மாயாமாளை கௌளம்
25. திருத்தாண்டகம் - அரிகாம்போதி
26. திருநேரிசை - அரிகாம்போதி
27. திருவிருத்தம் - பைரவி
28. திருவிசைப்பா - ஆனந்தபைரவி