சைவ சமய வழிபாட்டு முறைகளாக ஆகமங்களில் கூறப் பெறுபவை. நோக்கம் மெய்யறிவு பெறுதல். இறைவனை நிலைபெறச் செய்த பின் மேற்கொள்ளப்படும் பணிவிடைகளாவன.
1. ஆசனம் - இருக்கை அமைத்தல்
2. பாத்யம் - நீர் தருதல்
3. ஆசமனம் - மந்திரநீர்கொள்ளல்
4. ஆர்க்கியம் - நீரளித்தல்
5. அபிடேகம் - திருமுழுக்கு
6. வத்திரம் - ஆடை அணிவித்தல்
7. கந்தம் - நறுமணம் இடல்
8. பூ - மலர் சாத்தல்
9. தூபம் - புகையிடல்
10. நைவேத்தியம்; திருவமுது படைத்தல்
11. தாம்பூலம் - வெற்றிலை பாக்கு வைத்தல்
12. தர்ப்பணம் - கண்ணாடிகாட்டல்
13. சாமரம், விசிறியால் விசுறுதல்
14. நமக்காரம் - வணங்குதல்
15. பிரதட்சிணம் - வலம் வருதல்
16. விசர்சனம் - வெளியேற்றல்
வழிபாட்டு வகை
1. இடவகை வழிபாடு
அ) தனி வழிபாடு - தன் பொருட்டு இல்லத்தில் நடைபெறுவது.
ஆ) கூட்டு வழிபாடு - பிறர் பொருட்டுக் கோயிலில் நடைபெறுவது. கோயில் வழிபாடு மக்கள் தொழில் அனைத்திற்கும் மையமாக இருப்பது போல், தனி வழிபாடும் பிற செயல்களுக்கு மையமாக அமைதல்வேண்டும்.
2. உருவ வழிபாடு
அ) இலிங்க வழிபாடு
ஆ) குருவழிபாடு
இ) சங்கம வழிபாடு.